»   »  விக்ரமுக்கு ஜோடி காத்ரீனா!

விக்ரமுக்கு ஜோடி காத்ரீனா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாலிவுட்டை தனது பேரழகாலும், வாளிப்பான வசீகரத்தாலும் சுழற்றி எடுத்து வரும்காத்ரீனா கைப், தமிழுக்கு வருகிறார். விக்ரமுடன் ஜோடி போட்டு அவர் நடிக்கப்போகும் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தி ரசிகர்களை கிளாமரால் இம்சித்து வரும் காத்ரீனா கைப், ஆட்டத்திலும்,நடிப்பிலும் தூள் கிளப்பி வருபவர்.

மான் புகழ் சல்மான் கானுடன் பலமாக கிசுகிசுக்கப்பட்டவர். சல்மான் கான்கேஸ்களில் சிக்கி அலைக்கழிக்கப்பட்டபோது அவருக்கு படு சப்போர்ட் ஆகஇருந்தவர் காத்ரீனா.

இப்போது மும்பை நடிகைகள் கோலிவுட்டை நோக்கி ஓடோடி வரும் காலம். அந்தவகையில் காத்ஙுனாவும் கோலிவுட்டுக்கு வருகிறார். கலைப்புலி தாணு தயாரிப்பில்,சுசி. கணேசன் இயக்கத்தில், சீயான் விக்ரமின் நடிப்பில் உருவாகவுள்ள புதுப் படத்தில்காத்ரீனாதான் ஹீரோயினாம்.

எல்லாவற்றையும் பேசி முடித்து விட்டார்களாம். செமையான சம்பளம் ஒன்றுகாத்ரீனாவுக்குக் கொடுக்கப்படவுள்ளதாம். காத்ரீனா நடிக்கப் போகும் முதல் தமிழ்ப்படம் என்பதால் படு பிரமாண்டமாக எடுக்கவுள்ளார் தாணு.

பாலிவுட்டைக் கலக்கி வரும் கிளாமர் புயலான காத்ரீனா, தமிழுக்கு திசைதிரும்பியுள்ளதால் அதில் சிக்காமல் தப்புவது எப்படி என்று இங்குள்ள லோக்கல்ஹீரோயின்கள் குழம்பிப் போய்க் கிடக்கிறார்களாம்.

குறிப்பாக சீயானுடன் நட்போடு பழகி வரும் நடிகைகள் அத்தனை பேருக்கும் கும்பிகலங்கியிருக்கிறதாம். அதேசமயம், இங்குள்ள தயாரிப்பாளர்கள்சந்தோஷமடைந்துள்ளனர். நம்ம அடுத்த படத்தில் காத்ரீனாதான் நாயகி என்று பலரும்முடிவு செய்து பணப் பெட்டியோடு காத்திருக்கிறார்களாம்.

தெனனக சினிமா கைபுக்கு புதிதல்ல. ஏற்கனவே பெரிசு பாலகிருஷ்ணாவோடுஅல்லரி பிடுகு என்ற தெலுங்கு படத்திலும் மம்மூட்டியுடன் ஒரு மலையாளப்படத்திலும் முட்டியவர் தான்.

இப்போது தமிழுக்கு வருகிறார். வாகான வாத்து பிரியாணி வருது, ரசிகர்களே கெட்ரெடி!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil