»   »  பட வாய்ப்புகளில் கையை வைக்கும் தீபிகாவின் இந்த காதலையும் அத்துவிடும் பரம எதிரி?

பட வாய்ப்புகளில் கையை வைக்கும் தீபிகாவின் இந்த காதலையும் அத்துவிடும் பரம எதிரி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தனது பட வாய்ப்புகளை தட்டிப் பறிக்க முயற்சி செய்யும் தீபிகாவின் காதலை அத்துவிட கத்ரீனா கைஃப் முயற்சி செய்வதாக பாலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிகர் ரன்பிர் கபூரை காதலித்தார். தீபிகாவை ரன்பிரின் அம்மாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று கூறப்பட்டது.

இந்நிலையில் ரன்பிரின் வாழ்வில் நடிகை கத்ரீனா கைஃப் வந்தார்.

காதல் முறிவு

காதல் முறிவு

ரன்பிருக்கு கத்ரீனா கைஃபை பிடித்துப் போகவே அவர் தீபிகாவுடனான காதலை முறித்துக் கொண்டார். அதில் இருந்து தீபிகாவுக்கு கத்ரீனாவை கண்டாலே பிடிக்காது.

தீபிகா

தீபிகா

காதல் முறிவுக்கு பிறகு தீபிகா கத்ரீனாவை எங்கு பார்த்தாலும் பார்க்காதது போன்றே போவார். இல்லை என்றால் அந்த நிகழ்ச்சிக்கு வர மாட்டார். கத்ரீனாவும் அப்படித் தான்.

கத்ரீனா

கத்ரீனா

அண்மை காலமாக தீபிகா கத்ரீனா கைஃபின் பட வாய்ப்புகள் மற்றும் விளம்பரப் பட வாய்ப்புகளை தட்டிப் பறித்து வருகிறார். இந்நிலையில் கத்ரீனா தீபிகாவின் காதலர் ரன்வீர் சிங்குடன் நெருக்கமாக பழக ஆரம்பித்துள்ளார்.

ரன்வீர் சிங்

ரன்வீர் சிங்

ரன்வீர், தீபிகா சேர்ந்து பத்மாவதி படத்தில் நடித்து வருகிறார்கள். முன்பெல்லாம் ஷாட் முடிந்தால் செட்டில் உட்கார்ந்து இருவரும் கடலை போடுவார்கள், மற்றவர்களுடன் ஜாலியாக பேசுவார்கள்.

பிரிவு

பிரிவு

தற்போது ரன்வீரும் சரி, தீபிகாவும் தங்களின் ஷாட் முடிந்த உடன் அவரவர் கேரவன்களுக்கு சென்றுவிடுகிறார்கள். செட்டில் தீபிகா இருந்தால் ரன்வீர் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு யாரிடமும் பேசாமல் இருக்கிறாராம். அவர் இல்லை என்றால் ரன்வீர் ஜாலியாக இருக்கிறாராம், பேசுகிறாராம்.

பழி

பழி

தீபிகா, கத்ரீனா தொடர்ந்து மோதிக் கொள்வது ரன்வீருக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். தீபிகாவின் முந்தைய காதலை போன்றே இந்த காதலையும் கத்ரீனா அத்துவிடுவாரோ என்று பாலிவுட்டில் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.

English summary
According to the latest reports, gossip mills have again started working that something wrong between Ranveer and Deepika Padukone. It all started with their strange behaviour on the sets of their upcoming film, Padmavati.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil