கமல்ஹாசன் பிறந்தநாளில் கத்ரீனா கைஃப்புக்கு ஆண் குழந்தை.. அப்பாவான விக்கி கவுஷலுக்கு ஒரே குஷி!
மும்பை: பாலிவுட் நட்சத்திர ஜோடிகளான கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷல் தங்களது முதல் குழந்தையை வரவேற்றுள்ளனர். வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) அன்று அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இச்செய்தியை விக்கி கௌஷல் இன்ஸ்டாகிராமில் "ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்" என்ற தலைப்புடன் பகிர்ந்தார். 43 வயதாகும் கத்ரீனாவும், 37 வயதாகும் விக்கியும் கடந்த செப்டம்பரில் தங்கள் கர்ப்பம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.

ராஜஸ்தானில் உள்ள சிக்ஸ் சென்சஸ் ஃபோர்ட் பர்வாராவில் 2021-ஆம் ஆண்டு கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷல் திருமணம் நடைபெற்றது. குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்ட மிக நெருக்கமான ஒரு நிகழ்வாக அது அமைந்தது.
கத்ரீனா கைஃப் கர்ப்ப காலத்தில் பொது நிகழ்ச்சிகளில் அதிகம் தோன்றாமல் இருந்த நிலையில், விக்கி கௌஷல் பல சமூக மற்றும் திரைப்பட நிகழ்வுகளில் கலந்துகொண்டார். சமீபத்தில் யுவாவுடனான நேர்காணலில், தான் தந்தையாகப் போவதை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக விக்கி கௌஷல் தெரிவித்திருந்தார்.
"வெறும் தந்தையாக இருப்பதில்லை, அதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இது ஒரு பெரிய ஆசீர்வாதம் மற்றும் அற்புதமான காலம் என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட வந்துவிட்டது, அதனால் ஆர்வமாக இருக்கிறேன். நான் வீட்டிலிருந்து வெளியேறவே போவதில்லை என்று நினைக்கிறேன்" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக, விக்கி கௌஷலின் இளைய சகோதரரும் நடிகருமான சன்னி கௌஷல், தங்கள் குடும்பத்தில் புதிய உறுப்பினர் வருவதை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகக் கூறினார். "எல்லோருக்கும் பெரிய மகிழ்ச்சி மற்றும் என்ன நடக்குமோ என்ற பதற்றமும் உள்ளது. அந்த நாள் வரக் காத்திருக்கிறோம்" என அவர் இன்ஸ்டன்ட் பாலிவுட்டுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
கடந்த செப்டம்பர் 23 அன்று, கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷல் தங்களது கர்ப்பத்தை இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் அறிவித்தனர். அந்த பதிவில், விக்கி, கத்ரீனாவின் பேபி பம்பைப் பிடித்திருப்பது போன்ற ஒரு போலராய்டு பாணி புகைப்படம் பகிரப்பட்டது. அப்படத்தில் கத்ரீனா வெள்ளை டாப் மற்றும் ஜீன்ஸில் சாதாரணமாகக் காணப்பட்டார்.
திரைப்பயணத்தை பொறுத்தவரை, கத்ரீனா கைஃப் கடைசியாக 'மெர்ரி கிறிஸ்துமஸ்' என்ற க்ரைம் த்ரில்லர் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்திருந்தார். விக்கி கௌஷல், 2025-ஆம் ஆண்டின் அதிக வசூல் ஈட்டிய படங்களில் ஒன்றான 'சாவா' படத்தில் ராஷ்மிகாவுடன் ஜோடி போட்டு நடித்திருந்தார்.
கத்ரீனா கைஃப் குழந்தை வளர்ப்புக்காக சுமார் ஒரு வருடமாவது புதிய படங்களில் கமிட் செய்ய மாட்டார் என பாலிவுட்டில் தகவல்கள் பரவி வருகின்றன. கத்ரீனா கைஃப் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான அறிவிப்பை பார்த்த கரீனா கபூர், சோனம் கபூர் என பல பாலிவுட் நடிகைகள் மற்றும் பிரபலங்கள் புதிதாக பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்தி வருகின்றனர்.
நவம்பர் 7ம் தேதி ரொம்பவே ராசியான நாள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். உலக நாயகன் கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று. மேலும், அனுஷ்கா ஷெட்டி, வெங்கட் பிரபு உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் பிறந்த நன்னாளில் கத்ரீனா கைஃப் மகனும் பிறந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











