»   »  மும்பை சர்ச்சுக்கு சென்று குமுறிக் குமுறி அழுத கத்ரீனா கைஃப்

மும்பை சர்ச்சுக்கு சென்று குமுறிக் குமுறி அழுத கத்ரீனா கைஃப்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் மும்பையில் உள்ள தேவாலயம் ஒன்றுக்கு சென்று கதறி அழுதுள்ளார்.

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் நடிகர் ரன்பிர் கபூரை காதலித்து வருகிறார். அவர்கள் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்று கூறப்படுகிறது. கத்ரீனா ரன்பிர் கபூர் குடும்பத்தாருடன் நன்கு பழகி வருகிறார்.

இந்நிலையில் கத்ரீனா மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சென்றுள்ளார்.

கத்ரீனா

கத்ரீனா

தேவாலயத்திற்குள் நுழைந்த கத்ரீனா மேரி மாதாவின் சிலை அருகே சென்றதும் துக்கம் தாங்க முடியாதவர் போன்று குமுறிக் குமுறி அழுதுள்ளார். அவர் தேவாலயத்திற்குள் நுழையும் போதே கவலையாக காணப்பட்டுள்ளார்.

அழுகை

அழுகை

கத்ரீனா தேவாலயத்திற்கு வந்ததை பார்த்து அவரை புகைப்படம் எடுக்க வந்த புகைப்படக்காரர் அவர் அழுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து சென்றுவிட்டார்.

ரன்பிர் கபூர்

ரன்பிர் கபூர்

தமாஷா படத்தில் ரன்பிர் கபூர் தனது முன்னாள் காதலி தீபிகா படுகோனேவுடன் சேர்ந்து நடித்துள்ளார். படத்தில் அவர்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி சூப்பர் என்று பலரும் கூறுவது கத்ரீனாவுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லையாம்.

படுக்கையறை காட்சி

படுக்கையறை காட்சி

ஏற்கனவே கொதிப்பில் இருக்கும் கத்ரீனாவுக்கு தமாஷா படத்தில் ரன்பிர், தீபிகா படுக்கையறைக் காட்சியில் மிகவும் நெருக்கமாக நடித்துள்ளது மேலும் எரிச்சலை அளித்துள்ளதாம்.

தீபிகா

தீபிகா

தமாஷா படப்பிடிப்பு தளத்தில் ரன்பிர், தீபிகா நெருங்கிப் பழகியதும் கத்ரீனாவின் கவலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

English summary
Bollywood actress Katrina Kaif visited a church in Mumbai and cried uncontrollably which shocked a photographer who came there.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil