பிறந்தநாளும் அதுவுமாக பிகினி போட்டோ வெளியிட்ட நடிகை

By Siva

மும்பை:பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் தனது பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் தனது குடும்பத்துடன் மெக்சிகோவில் பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.

Katrina Kaif celebrates birthday today

இந்நிலையில் அவர் தனது பிறந்தநாள் அன்று தன் பிகினி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். மெக்சிகோவுக்கு சென்றதில் இருந்தே அடிக்கடி பிகினி புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார் அவர்.

கத்ரீனா தனது முன்னாள் காதலரான சல்மான் கானுடன் சேர்ந்து நடித்த பாரத் படம் ரம்ஜான் பண்டிகை அன்று வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தில் சல்மான் ஜோடியாக ப்ரியங்கா சோப்ரா தான் நடிப்பதாக இருந்தது. ஆசைப்பட்டு வாய்ப்பு வாங்கிவிட்டு பின்னர் நிக் ஜோனஸை திருமணம் செய்வதற்காக பாரத் படத்தில் இருந்து வெளியேறினார் ப்ரியங்கா.

ப்ரியங்கா வெளியேறிய பிறகு கத்ரீனா கைஃபை ஒப்பந்தம் செய்தார்கள். பாரத் படம் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் உள்ளார் கத்ரீனா. பிறந்தநாள் குறித்து கத்ரீனா கூறியதாவது,

பிறந்தநாள் என்றாலே ஜாலி தான். ஆனால் அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. லீவு எடுத்துவிட்டு குடும்பத்தார், நண்பர்களுடன் நேரம் செலவிட பிறந்தநாள் ஒரு நல்ல வாய்ப்பு. நான் எப்பொழுதுமே என் பிறந்தநாளை குடும்பத்தார், நண்பர்களுடன் தான் கொண்டாடுகிறேன்.

இந்த ஆண்டு எனக்கு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது. என் வேலை திருப்தி அளிப்பதாக உள்ளது. புதுப் புது கதாபாத்திரங்களில் நடிக்க ஆவலாக உள்ளேன் என்றார்.

பாரத் படத்தை அடுத்து கத்ரீனா ரோஹித் ஷெட்டியின் இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்து வரும் சூர்யவன்ஷி படத்தில் நடிக்கிறார். இதற்கிடையே பிறந்தநாளை கொண்டாட வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் கத்ரீனாவுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கத்ரீனா கைஃப் தனது தங்கை இசபெல்லை பாலிவுட்டில் பெரிய ஆளாக்கிவிட வேண்டும் என்று விரும்புகிறார். மேலும் அதற்கான முயற்சிகளும் செய்து வருகிறார். ஆனால் இசபெல் ஏற்கனவே தலைக்கனம் உள்ளவர் என்று பெயர் எடுத்துவிட்டதால் அவரின் இமேஜை சரி செய்ய முயன்று வருகிறார் கத்ரீனா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X