முதல்ல மெட்டனுப்புங்க... அப்புறம் ஒரு கோடி துட்டனுப்புங்க! - அலற வைக்கும் நடிகை
இயக்குநராக வெற்றிக் கொடி நாட்டி, பின்னர் நடிகராக சொதப்ப ஆரம்பித்த எஸ் ஜே சூர்யா, நடித்து இயக்கும் புதிய படமான 'இசை'யின் இறுதிக் கட்ட வேலைகள் நடந்து கொண்டுள்ளன.
இந்தப் படத்தில் தன்னுடன் ஒரு ஐட்டம் பாடலுக்கு ஆட பிரபல நடிகைகளைத் தேடிய எஸ் ஜே சூர்யா, கடைசியில் பாலிவுட்டின் முன்னணி நடிகை கத்ரீனா கைபை அணுகியுள்ளார்.
படத்தின் கதை, யார் இசை என்றெல்லாம் கேட்ட கத்ரீனா, இசையமைத்துள்ளது எஸ்ஜே சூர்யாதான் என்றதும், முழு மெட்டையும் எனக்கு அனுப்ப முடியுமா என்று கேட்டுள்ளார்.
கூடவே அவர் சொன்னது, "இந்தப் பாட்டுக்கு நான் ஆட ரூ 1 கோடிக்கு மேல் சம்பளமாக வேண்டும். அட்லீஸ்ட் 1 கோடியாவது வேண்டும். தயார் என்றால் மெட்டை அனுப்பிய கையோடு, பணத்தை செட்டில் பண்ணிடுங்க, நான் தயார்," என்றாராம்.
ஷாக்காகி திரும்பியுள்ளார் எஸ்ஜே சூர்யா.
இதுக்கு பேசாம சன்னி லியோன் கிட்டயே பேசி முடிச்சிடலாம்!


Click it and Unblock the Notifications











