பிரபாஸின் ஸ்பிரிட்'படத்தில் கத்ரீனா கைஃப்? தீபிகாவுக்கு பதிலாக என்ட்ரியா.. மீண்டும் சூடுபிடிக்கும் சர்ச்சை!

சென்னை: பிரபாஸ் நடிப்பில் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கி வரும் 'ஸ்பிரிட்' திரைப்படம் ஆரம்பம் முதலே ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. படத்தின் கதைக்களம் மட்டுமல்லாமல், அதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றிய தகவல்களும் தொடர்ந்து பேசுபொருளாகி வருகின்றன. அந்த வகையில், தற்போது பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் இந்தப் படத்தில் இணையவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

முன்னதாக, இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்னதாக அவர் பிரபாஸின் கல்கி படத்தில் இருந்தும் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், சில காரணங்களால் அவர் படத்திலிருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகின. அதன் பிறகு, அந்தக் கதாபாத்திரத்தில் நடிகை திரிப்தி திம்ரி ஒப்பந்தமானதாக கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது கத்ரீனா கைஃப்பின் பெயரும் 'ஸ்பிரிட்' படத்துடன் இணைக்கப்பட்டிருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Katrina Kaif in Prabhas Spirit Fresh Rumours Surface After Deepika Padukone s Exit Buzz

சினிமா வட்டாரங்களில் வெளியாகியுள்ள தகவலின்படி, 'ஸ்பிரிட்' படத்தில் முக்கியமான கேமியோ கதாபாத்திரம் ஒன்றுக்காக கத்ரீனா கைஃப்புடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். திரையில் சில நிமிடங்கள் மட்டுமே வந்தாலும், கதையின் திருப்புமுனைக்கு முக்கியமான கதாபாத்திரமாக அது இருக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இது தொடர்பாக படக்குழு தரப்பிலோ அல்லது கத்ரீனா கைஃப் தரப்பிலோ இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

தென்னிந்திய சினிமா: இந்த தகவல் உண்மையானால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு கத்ரீனா கைஃப் மீண்டும் தெலுங்கு சினிமாவில் நடிக்கவுள்ளார். இதற்கு முன்பு வெங்கடேஷுடன் 'மல்லீஸ்வரி', நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன் அதாவது நமது பாலய்யாவுடன் 'அல்லரி பிடுகு' ஆகிய படங்களில் நடித்திருந்தார். அதன் பிறகு பாலிவுட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த அவர், தற்போது மீண்டும் தென்னிந்திய சினிமாவுக்கு வரலாம் என்ற தகவல் ரசிகர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

என்ன காரணம்?: இதற்கிடையில், தீபிகா படுகோன் ஏன் 'ஸ்பிரிட்' படத்திலிருந்து விலகினார் என்ற விவாதமும் இன்னும் ஓயவில்லை. சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களின்படி, சம்பளம், லாபப் பங்கு, வேலை நேரம் உள்ளிட்ட சில விஷயங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே அவர் விலகியதாக கூறப்பட்டது. ஆனால், இதுகுறித்து தயாரிப்புத் தரப்போ, தீபிகா தரப்போ அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

Katrina Kaif in Prabhas Spirit Fresh Rumours Surface After Deepika Padukone s Exit Buzz

பேச்சு: பிரபாஸ், சந்தீப் ரெட்டி வங்கா கூட்டணியில் உருவாகும் இந்தப் படம் ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்நிலையில், கத்ரீனா கைஃப் இணைகிறார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை இது வதந்தியாகவே பார்க்கப்பட்டாலும், 'ஸ்பிரிட்' படத்தின் மீதான ரசிகர்களின் ஆர்வத்தை இந்த தகவல் மேலும் அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X