நடிகர் ரித்திக்கின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் கத்ரீனா கைஃப் காயம்
மும்பை: பாங் பாங் படப்பிடிப்பில் நடிகர் ரித்திக் ரோஷனின் வேகத்திற்கு ஈடு கொடுத்து ஆட முடியாமல் கத்ரீனா கைஃப் காயம் அடைந்தார்.
ரித்திக் ரோஷன், கத்ரீனா கைஃப் ஜோடி சேர்ந்து நடித்து வரும் படம் பாங் பாங். இந்த படத்தின் படப்பிடிப்பில் ரித்திக்கின் தலையில் அடிபட்டு அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு சென்றது.
அறுவை சிகிச்சை முடித்து ரித்திக் பாங் பாங் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.

பாடல்
பாங் பாங் படத்தில் பாடல் காட்சி ஒன்றை படமாக்கினர். ரித்திக் ரோஷன் பம்பரமாய் ஆட அவரது வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் கத்ரீனா கைஃப் திணறினார்.

காயம்
ரித்திக்கிற்கு டான்ஸ் ஆடுவது கை வந்த கலை. அவர் வளைந்து நெளிந்து ஆட அவருக்கு ஏற்றது போல் ஆட முயன்ற கத்ரீனாவுக்கு காயம் ஏற்பட்டது.

முத்த காட்சி
பாங் பாங் படத்தில் ரித்திக், கத்ரீனா லிப் டூ லிப் கொடுக்கும் காட்சி உள்ளதாம். இந்த காட்சிக்காகவே ஒரு நாள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம் கத்ரீனா.

ஜிந்தகி நா மிலேகி
முன்னதாக ஜிந்தகி நா மிலேகி தோ பாரா படத்தில் ரித்திக் ரோஷனுடன் லிப் டூ லிப் காட்சியில் கத்ரீனா நடித்திருந்தார். கத்ரீனா பல டேக்குகள் வாங்கியதால் முத்தக் காட்சியை படமாக்க ஒரு நாள் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

கத்ரீனா
மனைவி சூசனை பிரிந்து கவலையில் இருக்கும் ரித்திக் ரோஷனுக்கு கத்ரீனா தான் ஆறுதல் கூறி வருகிறார் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











