பாத்திரம் கழுவியாச்சு.. அடுத்தது.. கையில் துடைப்பத்துடன் கத்ரீனா கைஃப் என்ன பண்றாருன்னு பாருங்க!

மும்பை: 21 நாட்கள் லாக் டவுனை பாலிவுட் நடிகையான கத்ரீனா கைஃப் திறம்பட பயன்படுத்தி வருகிறார்.

Recommended Video

Celebrity Cooking Challenge | Shanthanu KiKi | Roja | Self Quarantine

ஷூட்டிங் இல்லாததால், வீட்டில் இருக்கும் சின்ன சின்ன வேலைகளை நடிகை கத்ரீனா கைஃப் செய்து வருகிறார்.

பாத்திரம் கழுவும் வீடியோவை அண்மையில் வெளியிட்ட கத்ரீனா கைஃப், தற்போது, கையில் துடைப்பத்துடன் வீட்டை பெருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

லீடு ஹீரோயின்

லீடு ஹீரோயின்

பாலிவுட்டின் பிரபல நடிகையான கத்ரீனா கைஃப், பிரதமர் மோடி அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகிறார். மேலும், தனது ரசிகர்களை, வீட்டில் இருந்தபடியே, வீட்டில் உள்ளவர்களுக்கு உதவி செய்யும் விதமாக சின்ன சின்ன வேலைகளையும், மொட்டை மாடியிலோ அல்லது வீட்டிலேயோ வொர்க்கவுட் செய்யவும் வலியுறுத்தி வருகிறார்.

வீடியோ கால்

கொரோனா வைரஸ் காரணமாக விடுப்பு அளிக்கப்பட்டிருந்தாலும், யாரும் வீட்டை விட்டு வெளியே சுற்றக் கூடாது என உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், தனது சினிமா நண்பர்களான வருண் தவான் மற்றும் அர்ஜுன் கபூர் உடன் வீடியோ காலில் அரட்டை அடிக்கும் கத்ரீனா கைஃப், அதன் ஸ்க்ரீன் ஷாட்டையும் அண்மையில் பகிர்ந்து லைக்குகளை அள்ளி இருந்தார்.

பாத்திரம் கழுவுதல்

மேலும், வீட்டில் சோம்பேறியாக இல்லாமல், பிறருக்கு உதவியாக இருக்க விரும்பும் நடிகை கத்ரீனா கைஃப், பாத்திரம் கழுவும் வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். லாக் டவுன் காலத்தை தான் எப்படி உபயோகம் உள்ளதாக மாற்றுகிறேன் என ரசிகர்களுக்கு அடிக்கடி பதிவுகளை போட்டு தெரிவித்து வருகிறார்.

துடைப்பத்துடன்

பாத்திரம் கழுவியாச்சு, அடுத்து வீட்டை சுத்தம் செய்யும் வேலை தானே என, துடைப்பத்தை எடுத்து அழகாக கத்ரீனா கைஃப் பெருக்கும் வீடியோ பாலிவுட் ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது. ப்ளூ கலர் டாப் மற்றும், கட்டம் போட்ட குட்டி டவுசர் போட்டுக் கொண்டு கிளாமருக்கும் பஞ்சமின்றி வீட்டை பெருக்கும் வீடியோவை கத்ரீனா வெளியிட்டுள்ளார்.

துடைப்பத்தில் கிரிக்கெட்

துடைப்பத்தில் கிரிக்கெட்

என்னடா அழகா அடக்கம் ஒடுக்கமாக கூட்டிப் பெருக்குகிறாரே வீட்டை என்று பார்த்தால், வீடியோவின் இடையில், திடீரென, துடைப்பத்தை வைத்து கிரிக்கெட் விளையாடி, தனது குறும்புத்தனமான சேட்டைகளையும் அவிழ்த்து விட்டு, 33 லட்சம் பேரை அசந்து போய் பார்க்க வைத்துள்ளார் கத்ரீனா கைஃப்.

தள்ளிப் போன படம்

தள்ளிப் போன படம்

மார்ச் மாதம் இந்நேரத்துக்கு, அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன், ரன்வீர் சிங், கத்ரீனா கைஃப் நடிப்பில் ரோகித் ஷெட்டி இயக்கத்தில் உருவான சூர்யவன்ஷி திரைப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்திருக்கும். ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக தேதி குறிப்பிடாமல், சூர்யவன்ஷி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X