»   »  தமாஷா பார்ட்டிக்கு அழைக்காமல் வந்த கத்ரீனா: முறைத்து முறைத்து பார்த்த தீபிகா

தமாஷா பார்ட்டிக்கு அழைக்காமல் வந்த கத்ரீனா: முறைத்து முறைத்து பார்த்த தீபிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தீபிகா படுகோனே தமாஷா பார்ட்டிக்கு அழையா விருந்தாளியாக வந்த கத்ரீனா கைஃபை முறைத்துப் பார்த்துள்ளார்.

தீபிகா படுகோனேவும் அவரது முன்னாள் காதலருமான நடிகர் ரன்பிர் கபூரும் சேர்ந்து தமாஷா படத்தில் நடித்துள்ளனர். படப்பிடிப்பின்போது அவர்களுக்கு இடையே இருந்த கெமிஸ்ட்ரியை பார்த்து படக்குழுவினர் ஆச்சரியப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் படப்பிடிப்பு கடந்த வாரம் நிறைவடைந்தது.

பார்ட்டி

பார்ட்டி

தமாஷா படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து கடந்த சனிக்கிழமை தயாரிப்பாளர் சாஜித் நாதியாத்வாலா பார்ட்டி கொடுத்துள்ளார். பார்ட்டியில் முன்னாள் காதலர்களான ரன்பிர், தீபிகா கலந்து கொண்டுள்ளனர்.

கண்ணீர்

கண்ணீர்

பார்ட்டியில் ஜாலியாக ஆட்டம் போட்ட ரன்பிரும், தீபிகாவும் படப்பிடிப்பு முடிந்து பிரிவதை நினைத்து கட்டிப்பிடித்து அழுதுள்ளனர்.

கத்ரீனா கைஃப்

கத்ரீனா கைஃப்

பார்ட்டி நடந்து கொண்டிருக்கையில் ரன்பிர் கபூரின் காதலியான நடிகை கத்ரீனா கைஃப் அங்கு அழையா விருந்தாளியாக வந்துள்ளார். அவரை பார்த்ததும் அங்கிருந்தவர்கள், இவர் எதற்கு இங்கு வந்தார் என்று நினைத்துள்ளனர்.

தீபிகா

தீபிகா

ரன்பிருடன் ஒட்டி உறவாடிய தீபிகாவை கத்ரீனா கைஃப் முறைத்துப் பார்த்துவிட்டு தனது காதலர் அருகே சென்றுள்ளார். தீபிகாவும், கத்ரீனாவும் ஒருவரையொருவர் முறைத்துப் பார்த்துக் கொண்டனர்.

English summary
Katrina Kaif came to Tamasha party which allegedly made Deepika Padukone uncomfortable as her former boyfriend was there with her.
Please Wait while comments are loading...