சல்மான் கொடுத்த காரை விற்கப் போகிறாராம் காத்ரீனா கைப்
மும்பை: தனது முன்னாள் காதலர் சல்மான் கான் பரிசாகக் கொடுத்த காரை விற்கப் போகிறாராம் காத்ரீனா கைப்.
காத்ரீனா கைபும், சல்மான் கானும் முன்பு போல இப்போது பழகிக் கொள்வதில்லை. அவர்களுக்கு இடையே இருந்து வந்த அந்த அந்நியோன்யம் போய் விட்டது.
சாதாரண நடிகர்களாக, நண்பர்களாக மட்டுமே தற்போது பார்த்துக் கொள்கின்றனர். காத்ரீனா தனது பாதையில்நடக்க ஆரம்பித்து விட்டார்.

கார் வாங்கலியோ...
இந்த நிலையில் சல்மான் கான் தனக்குப் பரிசாக கொடுத்த காரை விற்கப் போகிறாராம் காத்ரீனா கைப்.

கருப்பு காருங்கோ..
இந்தக் கார் கருப்பு நிறம் கொண்ட எஸ்.யு.வி. ஆகும். கடந்த வருடம் காத்ரீனாவின் பிறந்த நாளன்று சல்மான் இதைப் பரிசாக கொடுத்தார்.

ரகசியப் பரிசு
காத்ரீனாவும், சல்மானும் ரொம்ப வருடமாக நெருக்கமாக இருந்து வந்தாலும் கூட தங்களது காதலை வெளிப்படையாக ஒருபோதும் பேசியதில்லை. இருப்பினும் ஏகப்பட்ட பரிசுகளை இருவரும் ரகசியமாக பகிர்ந்து கொண்டுள்ளனர்.

என்ன விலை தருவீங்க...
தற்போது சல்மானின் இந்தக் காரை விற்பது தொடர்பாக ஒரு டீலரிடம் பேச்சுவார்த்தையெல்லாம் கூட முடித்து விட்டாராம் காத்ரீனா.
காதலே போச்சு.. இனி கார் இருந்தா என்ன போனா என்ன....அப்படித்தானே சிஸ்டர்?


Click it and Unblock the Notifications











