எனக்கு நடிக்கத் தெரியாதா?: சொன்னா சொல்லட்டும்- கத்ரீனா கைஃப் 'கூல்' பதில்
மும்பை: தனக்கு நடிக்க தெரியாது என்று கூறுபவர்கள் தாராளமாக கூறட்டும் என்று பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரைச் சேர்ந்த முகமது கைஃபுக்கும், இங்கிலாந்தைச் சேர்ந்த சூசன்னா என்பவருக்கும் பிறந்தவர் கத்ரீனா கைஃப். இங்கிலாந்து குடிமகளான அவர் படிப்பில் ஆர்வம் இல்லாமல் சினிமா மீது ஆர்வம் கொண்டார்.
சினிமாவில் சாதிக்க நினைத்த அவர் வாய்ப்பு தேடி இந்தியா வந்தார்.

மாடலிங்
கத்ரீனா கைஃப் 14 வயதில் இருந்து மாடலிங் செய்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது 20வது வயதில் நடிகை ஆனார். இங்கிலாந்தில் இருந்து வந்த அவருக்கு பாலிவுட் அடைக்கலம் அளித்தது.

சல்மான் கான்
கத்ரீனா சல்மான் கானுடன் சேர்ந்து நடித்த மெய்ன் பியார் க்யூன் கியா என்ற படம் தான் அவருக்கு பாலிவுட்டில் பெயர் வாங்கிக் கொடுத்தது. பின்னர் கத்ரீனாவும், சல்மானும் காதலர்கள் ஆனார்கள். சில ஆண்டுகள் கழித்து அவர்கள் பிரிந்துவிட்டனர்.

நடிப்பு
கத்ரீனா நடிக்க வந்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் நடிப்பு என்று வரும்போது அவரை குறைத்தே மதிப்பிடுகிறார்கள். கத்ரீனாவுக்கு செக்சியாக வரத் தான் தெரியும், நடிக்கத் தெரியாது என்ற கருத்து நிலவுகிறது.

காபி வித் கரண்
பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் நடத்தும் காபி வித் கரண் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டவர்கள் கத்ரீனாவின் நடிப்புத் திறமைக்கு மிகவும் குறைவான மதிப்பெண் அளித்தனர்.

சொல்லட்டும்
தனது நடிப்புத் திறமையை குறைத்து மதிப்பிட்டவர்கள் குறித்து கத்ரீனா கூறுகையில், அவர்களின் கருத்து என்னை பாதிக்காது. அவரவர் கருத்தை தெரிவிக்க மக்களுக்கு உரிமை உண்டு. இது ஓ.கே... அவர்கள் அப்படி நினைத்தார்கள் என்றால் நினைக்கட்டும் என்றார்.

ரன்பீர் கபூர்
கத்ரீனா கைஃப் தற்போது இந்தி நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து வருகிறார். முன்னதாக அவர், ரன்பீருடன் வெளிநாட்டு கடற்கரையில் பிகினியில் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











