2014ல் அதிகம் கூகுளில் தேடப்பட்ட ஹீரோயின் கத்ரினா கைஃப்
மும்பை: 2014ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட பாலிவுட் ஹீரோயின் கத்ரினா கைஃப் ஆவார்.
2014ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பாலிவுட் பிரபலங்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த பட்டியலில் கத்ரினா கைஃப் முதலிடத்தை பிடித்துள்ளார்.
கூகுள் இந்தியா வெளியிட்டுள்ள அந்த பட்டியலின் விவரம் வருமாறு,

கத்ரினா
இந்த ஆண்டு கத்ரினா கைஃப் ரித்திக் ரோஷனுடன் நடித்த பேங் பேங் படம் மட்டுமே ரிலீஸாகியுள்ளது. ஒரேயொரு படம் ரிலீஸான போதிலும் அவர் கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஹீரோயின் ஆகியுள்ளார். அதற்கு அவரது காதல் வாழ்க்கை தான் காரணம்.

ரன்பீர் கபூர்
கத்ரினா கைஃப் ரன்பீர் கபூரை காதலிப்பது பற்றி தான் பலரும் பேசி வருகின்றனர். அதிலும் அவர்கள் அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளப் போவதாக வேறு கூறப்படுகிறது.

தீபிகா
கூகுள் பட்டியலில் கத்ரீனாவை அடுத்து இந்த ஆண்டில் கோச்சடையான், பைன்டிங் பேனி மற்றும் ஹேப்பி நியூ இயர் படங்களில் நடித்த தீபிகா படுகோனே இடம்பெற்றுள்ளார்.

ஆலியா பட்
பாலிவுட்டின் இளம் நாயகியான ஆலியா பட் கூகுளில் அதிகம் தேடப்பட்ட மூன்றாவது பாலிவுட் ஹீரோயின் ஆவார்.

பிரியங்கா சோப்ரா
2014ம் ஆண்டில் ரிலீஸான குண்டே, மேரி கோம் ஆகிய படங்களின் நாயகி பிரியங்கா சோப்ராவுக்கு கூகுள் பட்டியலில் 4வது இடம் கிடைத்துள்ளது.

ஐஸ்வர்யா ராய்
படங்களில் நடிக்காவிட்டாலும் ஐஸ்வர்யா ராய் கூகுளில் அதிகம் தேடப்பட்ட 5வது ஹீரோயின் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

கரீனா
கரீனா கபூர் கூகுள் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளார். அவரை அடுத்து அனுஷ்கா சர்மா, ஸ்ரத்தா கபூர், சோனாக்ஷி சின்ஹா, சோனம் கபூர் ஆகியோர் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











