இதுக்கு முன் கட்டிப்பிடிச்சதே இல்லையா?.. கவினிடம் ஓபனாக கேட்ட நயன்தாரா.. கூச்சமே போயிடுச்சாம்

சென்னை: தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் கவின். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஐந்து படங்களில் டாடா படம் மட்டுமே சூப்பர் வரவேற்பை பெற்றது. அடுத்ததாக விஷ்ணு எடவன் இயக்கத்தில் ஹாய் படத்தில் நடிக்கிறார். இதில் அவருடன் நடிகை நயன்தாராவும் நடிக்கிறார். முதன்முறையாக நயனுடன் கவின் நடிப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அப்படத்தின் இயக்குநர் விஷ்ணு எடவன் அளித்திருக்கும் பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

சின்னத்திரையில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கியவர் கவின். அதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் சென்றார். தொடர்ந்து இயங்கி கொண்டிருந்த அவருக்கு திரைத்துறை கதவுகள் திறந்தன. சிவகார்த்திகேயனும் திருச்சியை சேர்ந்தவர்தான். அவரும் சின்னத்திரையிலிருந்துதான் பயணத்தை தொடங்கினார். கவினும் திருச்சியை சேர்ந்தவர். எஸ்கேவிடம் இருந்த இரண்டு விஷயங்கள் இவருக்கும் பொருந்திப்போயின. மேலும் திறமையும் கொண்டிருக்கிறார். இதன் காரணமாக பெரிய நடிகராக வருவார் என கணிக்கப்பட்டது.

Kavin Hesitated to Hug Nayanthara Director Vishnu Edavan Reveals Fun Shooting Moment
Photo Credit:

பிஸி ஹீரோ: தொடர்ச்சியாக படங்களில் நடித்த அவருக்கு டாடா திரைப்படம் சூப்பர் ஹிட்டை கொடுத்தது. அந்தப் படத்தின் வெற்றிக்கு அவர் நடித்த ஸ்டார், ப்ளடி பெக்கர், மாஸ்க் ஆகிய மூன்று படங்களும் சரியாக போகவில்லை. அதேசமயம் அம்மூன்று படங்களிலும் கவினின் நடிப்பு வெகுவாகவே பாராட்டப்பட்டது. முக்கியமாக ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசமான நடிப்பை கொடுத்திருந்தார். தனக்கு இன்னும் அதிகம் திறமை இருப்பதை அந்தப் படங்களின் மூலம் உணர்த்தினார் அவர்.

விஷ்ணு எடவன் இயக்கத்தில்: இப்போது அவர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் ஹாய் படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இதில் அவருடன் நயன்தாராவும் நடித்துவருகிறார். லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநர்தான் இந்த விஷ்ணு எடவன். லோகியின் படங்களில் முதுகெலும்பாக இவர்தான் இருப்பார் என்று கூறப்படுவதுண்டு. இயக்கம் மட்டுமின்றி சில பாடல்களையும் எழுதியிருக்கிறார். அவர் இப்போது இயக்குந்ராக அறிமுகமாகியிருப்பதால் படத்தின் மீது ஓரளவுக்கு எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. விரைவில் படம் ரிலீஸாகிவிடும் என்று தெரிகிறது.

Also Read
பெண்கள் மத்தியில் நடனம்.. விஜய் எவ்வளவு ஹேப்பியா இருந்திருக்காரு பாருங்க.. செம சூப்பரா இருக்கே!
பெண்கள் மத்தியில் நடனம்.. விஜய் எவ்வளவு ஹேப்பியா இருந்திருக்காரு பாருங்க.. செம சூப்பரா இருக்கே!

விஷ்ணுவின் பேட்டி: இந்நிலையில் அவர் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "முதலில் ஊர்க்குருவி என்ற படத்தை நயன்தாரா தயாரிப்பதாக இருந்தது. கவின்தான் நடிக்க கமிட்டானார். அப்போதிருந்தே கவினை நயனுக்கு நன்றாக தெரியும். முதல் நாள் ஷூட்டிங்கின்போது நயன்தாராவை கட்டிப்பிடிக்கும்படி காட்சி கொடுக்கப்பட்டது. அதில் நடிக்க கவின் ரொம்பவே தயங்கினார். உடனே நயன் மேடமோ, 'ஏன் இதற்கு முன்பு யாரையும் கட்டிப்பிடித்ததே இல்லையா?' என கேட்டு கலாய்த்துவிட்டார். செட்டில் இப்படித்தான் எப்போதும் சிரிப்பாக இருக்கும்" என்றார்.

நயனும் ஃபார்மில்: முன்னதாக நடிகை நயன்தாரா கைவசம் ஏகப்பட்ட படங்கள் இருக்கின்றன. டாக்சிக், மண்ணாங்கட்டி, ராக்காயி உள்ளிட்ட படங்கள் எல்லாம் ரிலீஸுக்கு தயாராக இருக்கின்றன. மேலும் ஹிந்தியில் சல்மான் கானுக்கு ஜோடியாக வம்சி இயக்கத்தில் நடிக்கவும் கமிட்டாகியிருக்கிறார். கவினோடும் நடிக்கிறார். இவ்வளவு உயரத்துக்கு சென்ற பிறகும் இளம் ஹீரோவுடன் நடிக்கும் நயனுக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள். அதேபோல் இடையில் அவரது படங்கள் வராமல் இருந்தபோது நயனுக்கு திருமணம் ஆகிவிட்டதால் மார்க்கெட் போய்விட்டது என்று ஒரு தரப்பினர் பேசியதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X