தெலுங்கில் காவ்யா!

மலையாளத்தில் இன்னும் பிசியாக இருந்து வரும் ஒரே நடிகை காவ்யாதான். காரணம், நயனதாரா, ஆசின் உள்ளிட்ட பலரும் மலையாளத்தில் தலை காட்டி வி்ட்டு அப்படியே தமிழுக்குத் தாவி விட்டதால், மலையாளத்தில் ஹீரோயின் பஞ்சம். இதை சரியாக பயன்படுத்திக் கொண்டதால் காவ்யா டாப்புக்குப் போனார். தொடர்ந்து அங்கேயே இருந்து வருகிறார்.
இந்த நிலையில் அவ்வப்போது தமிழிலும் நடித்து வருகிறார் காவ்யா. லேட்டஸ்டாக ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் சாது மிரண்டால் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவரைத் தேடி பல புதிய தமிழ்ப் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளதாம்.
இந்த நிலையில் தெலுங்கில் காவ்யாவுக்கு விருப்பம் வந்துள்ளது. தன்னைத் தேடி வரும் தெலுங்குப் படத் தயாரிப்பாளர்களிடம் ஆர்வமாக பேச ஆரம்பித்துள்ளாராம்.
விரைவில் அவர் ஹைதராபாத் பறப்பார் என்றும் இரண்டு படங்களில் புக் ஆவார் என்றும் கூறப்படுகிறது. இதில் நாகார்ஜூனா மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோர் நாயகர்களாக நடிக்கவுள்ளனராம்.


Click it and Unblock the Notifications











