மீண்டும் மலையாளத்துக்கே சென்ற கயாடு லோஹர்.. அடேங்கப்பா அந்த டாப் ஹீரோவுடன் ஜோடி சேர்ந்துட்டாரே!
சென்னை: 25 வயது இளம் புயலாக தமிழ் சினிமாவை கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை கயாடு லோஹர் மீண்டும் மலையாளத்தில் நடிக்க ஒரு பெரிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அதன் அறிவிப்பு வெளியான நிலையில், கயாடு லோஹரின் மலையாள ரசிகர்கள் ரொம்பவே ஹேப்பியாகி உள்ளனர்.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக இந்த ஆண்டு டிராகன் படத்தின் மூலம் அறிமுகமான கயாடு லோஹருக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தன.

அதர்வாவுடன் அவர் இணைந்து நடித்துள்ள இதயம் முரளி திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் உடன் இணைந்து இம்மார்ட்டல் எனும் படத்தில் நடித்து வருகிறார்.
சிம்பு படம் டிராப்: ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா முரளி நடித்த இதயம் முரளி படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகில் நடிகையாக கயாடு லோஹர் அறிமுகமானார். ஆனால், அந்த படம் இன்னமும் வெளியாகவில்லை. சமீபத்தில், ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் நடந்த ரெய்டு விவகாரம் பெரிய சர்ச்சையை கிளப்பிய நிலையில், ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் சிம்பு, சந்தானம், கயாடு லோஹர் நடிப்பதாக பூஜை போடப்பட்ட எஸ்டிஆர் 49 படம் டிராப் ஆகிவிட்டது. பார்க்கிங் பட இயக்குநரை விடுத்து தற்போது சிம்பு வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்து வருகிறார். சிம்புவுடன் நடிக்கும் வாய்ப்பை கயாடு லோஹர் இழந்த நிலையில், சில முன்னணி நடிகர்களும் கயாடு லோஹரை தற்போது தவிர்த்து வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
மீண்டும் மலையாளத்தில்: அசாமில் பிறந்து வளர்ந்த கயாடு லோஹர் கடந்த 2021ம் ஆண்டு கன்னட திரையுலகில் வெளியான முகில்பேட் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். 2022ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பத்தொன்பதாம் நூற்றாண்டு படத்தில் படு போல்டாக நங்கேலி கதாபாத்திரத்தில் கயாடு லோஹர் நடித்திருந்தார். இந்த ஆண்டு மலையாளத்தில் அவர் நடித்த ஒரு ஜாதி ஜாதகம் படம் வெளியான பின்னர், தமிழில் டிராகன் படத்தின் மூலம் அறிமுகமாகி இங்கே பிசியான நடிகையாக மாறினார். இந்நிலையில், மீண்டும் அவருக்கு மலையாளத்தில் பெரிய படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க, அங்கே சென்றுவிட்டார்.

டொவினோ தாமஸ் ஜோடி: இந்த ஆண்டு டொவினோ தாமஸ் நடித்த ஐடென்டிட்டி படத்தில் த்ரிஷா ஹீரோயினாக நடித்திருந்தார். சமீபத்தில், வெளியான நரிவேட்டை திரைப்படமும் டொவினோ தாமஸுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. இந்நிலையில், அடுத்து அவர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் பீரியட் டிராமா படமான பள்ளிச்சட்டம்பி படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தில் கயாடு லோஹர் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கயாடு லோஹர் உடன் டொவினோ தாமஸ் இருக்கும் புதிய புகைப்படத்துடன் அறிவிப்பு வெளியான நிலையில், மலையாள ரசிகர்கள் செம ஹேப்பி ஆகியுள்ளனர்.
டாப் ஹீரோயின்: தென்னிந்தியாவில் தற்போது டாப் இளம் நடிகையாக கயாடு லோஹர் மாறிவிட்டார் என்றும் கோலிவுட், டோலிவுட் மற்றும் மலையாள திரையுலகம் என தொடர்ந்து அவருக்கு ஏகப்பட்ட ஆஃபர்கள் குவிந்து வருவதாகவும், முக்கியமான படங்களை தேர்வு செய்து ஓகே சொல்லி வருகிறார் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











