ரெண்டே பேருக்கு நடுவே தான் போட்டியே.. ஒன்னு கயாடு லோஹர்.. இன்னொன்னு மமிதா பைஜு!

சென்னை: கோலிவுட்டின் அடுத்த டாப் நடிகைக்கான போட்டியே இரண்டு நடிகைகளுக்கு இடையே தான் நடைபெற்று வருவதாக பேச்சுக்கள் அடிபட்டுள்ளன. டிராகன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏகப்பட்ட கோலிவுட் படங்களை பிடிக்க நினைத்த கயாடு லோஹர் சில சர்ச்சைகளில் சிக்கிய நிலையில், மலையாளம் பக்கம் சென்றார். ஆனால், தற்போது மீண்டும் சரியான கம்பேக் கொடுத்து கோலிவுட்டில் கலக்க காத்திருக்கிறார்.

கயாடு லோஹர் கொஞ்சம் நகர்ந்த உடனே நடிகை மமிதா பைஜுவுக்கு அரைடஜன் படங்களுக்கு மேல் குவிந்தன. இந்நிலையில், மீண்டும் கயாடு லோஹர் களத்தில் இறங்கிய நிலையில், அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவியத் தொடங்கி உள்ளன.

Kayadu Lohar and Mamitha Baiju leading in Kollywood Top Heroine Race

நயன்தாரா, த்ரிஷா எல்லாம் சீனியர் நடிகைகள் ஆகிவிட்ட நிலையில், இளம் ரசிகர்களை கவரும் கோலிவுட் யங் குயின்களாக இந்த இருவர் தான் டஃப் போட்டி கொடுத்து வருவதாக கூறுகின்றனர்.

மமிதா பைஜு கைவசம்: இந்த ஆண்டு மமிதா பைஜு நடிப்பில் தனுஷின் கர படம் வெளியானது. விஜய்யின் ஜன நாயகன் படமும் ரிலீஸ் ஆக வேண்டியது. ஆனால், இதுவரை அந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் வெளியாகவில்லை. அடுத்ததாக சூர்யாவுடன் அவர் நடித்துள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது. மேலும், விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் இரண்டு வானம் படத்திலும் மமிதா பைஜு தான் ஹீரோயின். நிவின் பாலி நடிப்பில் மலையாளத்தில் உருவாகி வரும் பெத்லஹம் குடும்ப யூனிட் படத்திலும் மமிதா பைஜு நடித்து வருகிறார். பிரதீப் ரங்கநாதன் தயாரிக்கும் ஒரு படத்திலும் மமிதா பைஜு தான் லீடு ஹீரோயின் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

கயாடு லோஹர் காட்டுல மழை: கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான டிராகன் படத்தின் வெற்றிக்குப் பிறகு ஒரு வருடத்துக்கு மேலாகியும் தமிழில் கயாடு லோஹர் படங்கள் வெளியாகவில்லை. இந்நிலையில், வரும் ஜூலை 10ம் தேதி அதர்வாவுடன் கயாடு லோஹர் நடித்துள்ள இதயம் முரளி படம் வெளியாக காத்திருக்கிறது. மேலும், ஜி.வி. பிரகாஷ் குமாருடன் பாத் டப்பில் படுத்திருந்தாரே அந்த இம்மார்ட்டல் படமும் சீக்கிரம் ரிலீஸ் ஆகப்போகிறது. இந்த 2 படங்களை விட பெரிய ஜாக்பாட்டாக ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் பிரம்மாண்ட படத்திலும் கயாடு லோஹர் தான் ஜோடி. மேலும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மஞ்சணத்தி படத்திலும் கயாடு லோஹர் கமிட்டாகி உள்ள நிலையில், அவர் காட்டுல செம மழை என்கின்றனர். சிம்பு, தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுடனும் சீக்கிரமே சேர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X