டிராகன் பட ஹீரோயினுக்கு ஒரே வெட்கம்.. பிரபலம் கொடுத்த கிஃப்ட்.. அசந்து போன கயாடு லோஹர்

சென்னை: டிராகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் கயாடு லோஹர். இப்படத்தின் வெற்றியை காட்டிலும் அவரது காந்தப் புன்னகை சமூகவலைதளங்களை ஆக்கிரமித்தது. சமூவலைதள பக்கங்களை திறந்தாலே இந்த நடிகையின் புகைப்படமும், வீடியோக்களுமே அதிகம் காணப்பட்டன. அந்த அளவிற்கு நெட்டிசன்கள் கயாடு லோஹரை கெ்ாண்டாட தொடங்கினர். இந்நிலையில், இன்று நடிகை கயாடு லோஹரின் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான நாள் என்பது எத்தனை பேருக்கு தெரியும். இந்த நாளை எப்படியொல்லாம் கொண்டாடி இருக்கிறார் என்பதை இதில் காணலாம்.

டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடித்திருந்தார். இப்படம் கொடுத்த வெற்றியால் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க கமிட் ஆனார். டிராகன் படம் வெளியாகி ஹிட் அடைந்தாலும் கயாடு லோஹர் பீவர் குறையவில்லை. படத்தின் வெற்றியை விட கயாடு லோஹர் புகழின் உச்சிக்கே சென்று விட்டார். அவரது கால் அழகில் மாட்டிக்கொண்ட தமிழ் சினிமா ரசிகர்கள் எந்த பக்கம் திரும்பினாலும் கயாடுவின் வீடியோக்களே அதிகம் ஷேர் செய்யப்பட்டன. அவர் பேசும் தமிழும் ரசிகர்களுக்கு பிடித்து போனதால் டிரெண்டிங் ஹீரோயினாகவும் மாறினார்.

kayadu-lohar-birthday-celebration-in-idhayam-murali-shooting-spot

யார் இந்த தேவதை: இவர் டிராகன் படத்தில் நடிப்பதற்கு முன்பே தமிழில் பல படங்களில் நடிக்க தேர்வாகியும் நடிக்க முடியாமல் போயிருக்கிறது. டிராகன் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின் இதை தெரிவித்திருக்கிறார். ரொம்ப அழகாக இருந்ததால் என் படத்தில் இவரை தேர்வு செய்யவில்லை என கூறியுள்ளார். அதேபோன்று கவுதம் மேனன் போன்ற இயக்குநர்களின் படங்களிலும் நடிக்க தேர்வாகியும் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனது. இதையெல்லாம், தாண்டி அவரது புன்னகையில் மயங்கிய ரசிகர்கள் யார் இந்த தேவதை என தேட தொடங்கினர். இவரது கண்ணழகை பார்த்து மலையாள நடிகையா, கன்னட தேவதையா என பாட்டே சமூகவலைதளங்களில் பாடியுள்ளனர்.

சிம்பு படத்தில் கயாடு: டிராகன் படத்தின் வெற்றிக்கு பிறகு பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் சிம்புவை வைத்து இயக்கி வருகிறார். இப்படத்தில் 3 ஹீரோயின்கள் நடிப்பதாகக் கூறப்பட்டது. இதில், கயாடு லோஹரும் ஒருவர். இவர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறத. தமிழில் நடிக்கும் 2ஆவது படமே பெரிய ஸ்டார் மற்றும் பெரிய பட்ஜெட் படம் என கிசுகிசுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அதர்வாவுடன் இதயம் முரளி படத்திலும் நடித்து வருகிறார்.

kayadu-lohar-birthday-celebration-in-idhayam-murali-shooting-spot

விஜய் தான் என் கிரஷ்: அண்மையில் சேலம் தனியார் கல்லூரி ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சென்ற கயாடு லோஹர் பங்கேற்றார். அப்போது அவரிடம் கல்லூரி மாணவர்கள் பலவித கேள்விகளை கேட்டனர். பின்னர் பேசிய கயாடு, தனக்கு பிடித்த செலிபிரிட்டி க்ரஷ் விஜய்தான் என்று கூறியுள்ளார். மேலும் விஜய் நடித்த தெறி தனக்கு மிகவும் பிடித்த படம் என்றும் தெரிவித்திருந்தார். இதற்கு விஜய் ரசிகர்கள் அவரது வீடியோவை டிரெண்ட் செய்தனர்.

கண்ணழகிக்கு பிறந்தநாள்: அசாம் மாநிலம் தேஜ்பூரை சேர்ந்த கயாடு லோஹர் இன்று தனது 25ஆவது பிறந்தநாளை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். இதயம் முரளி படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாளை கொண்டாடியிருக்கும் வீடியோவை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இதயம் முரளி படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடந்து வருகிறது. அப்போது நடிகர் அதர்வா, இசையமைப்பாளர் தமன், நடிகர் நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலரும் கயாடு லோஹருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, க்யூட் ஸ்மைலோடு இருக்கும் கயாடு லோஹரின் வீடியோவும் வெளியாகியிருக்கிறது. அப்போது இசையமைப்பாளர் தமன் கொடுத்த கிஃப்டை பார்த்து அசந்து போன கயாடு சோ ஸ்வீட் என்று தெரிவித்திருக்கிறார். அப்போது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X