நங்கேலியாக நடித்த கயாடு லோஹர்.. எங்கெல்லாம் மேக்கப் போடுறாங்க பாருங்க.. தீயாக பரவும் வீடியோ!

சென்னை: டிராகன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாகவே மாறியுள்ள கயாடு லோஹர் மலையாளத்தில் முலை வரிக்கு எதிராக போராடிய நங்கேலியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நங்கேலியாகவே நடித்திருந்தார். வினயன் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான அந்த படத்திற்காக குதிரை சவாலி, கத்திச் சண்டை என பல வித்தைகளை அப்போதே கற்றுத் தேர்ந்தவர் தான் கயாடு லோஹர்.

மேலாடையே அணியாமல் ஒடுக்கப்பட்ட பெண்கள் இருக்க வேண்டும் என்றும் மேலாடை அணிவதற்கு தனியாக வரி செலுத்த வேண்டும் என்றெல்லாம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் சில கொடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்த நிலையில் அதற்கு எதிராக போராடும் நோக்கில் தனது மார்பகங்களையே அறுத்து வீசியவர் தான் நங்கேலி.

Kayadu Lohar makeup video for her Nangeli role in Pathonpatham Noottandu video goes trending
Photo Credit:

உடலை ஆடைக் கொண்டு மறைக்க முடியாமல் தவித்த பல பெண்களின் போராட்டங்கள் காரணமாகத்தான் இன்று ஆடை சுதந்திரத்துடன் பெண்கள் நடனமாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கயாடு லோஹர் அந்த படத்துக்காக மேக்கப் போட்ட காட்சிகள் சோஷியல் மீடியாவில் அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன.

திறமையான நடிகை கயாடு லோஹர்: 25 வயதாகும் நடிகை கயாடு லோஹருக்கு தமிழ் சினிமாவில் தற்போது அதிக பட வாய்ப்புகள் அடுக்கிக் கொண்டே போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2021ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான முகில்பேட் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் கயாடு லோஹர்.

அந்தப் படத்தை தொடர்ந்து மலையாளத்தில் வெளியான பத்தொன்பதாம் நூற்றாண்டு திரைப்படத்தில் நங்கேலி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். தெலுங்கில் அல்லூரி எனும் படத்திலும் மராத்தியல் ஐ பிரேம் யூ, மீண்டும் மலையாளத்தில் ஒரு ஜதி ஜாதகம் படத்தில் நடித்த கயாடு லோஹருக்கு தமிழ் சினிமாவில் டிராகன் படத்தின் மூலம் மிகப் பெரிய வெற்றி கிடைத்தது.

கைவசம் பல படங்கள்: ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்கியுள்ள இதயம் முரளி படத்தில் அதர்வா முரளிக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடித்துள்ளார். அந்த படம் இன்னமும் வெளியாகாமல் வெய்ட்டிங்கில் உள்ளது. அடுத்ததாக ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து இம்மார்ட்டல் படத்திலும் நடித்து வருகிறார். மேலும், ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் 49 வது படத்திலும் இவர் தான் ஹீரோயின் என ஒப்பந்தம் செய்யப்பட்டு சமீபத்தில் பூஜை போடப்பட்டது. ஆனால் அந்த படத்தின் படப்பிடிப்பு இன்னமும் தொடங்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், தனுஷ் உடன் ஒரு படத்திலும் ரவி மோகன் ஜோடியாக ஒரு படத்திலும், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக வெங்கட் பிரபு படத்திலும் கயாடு லோஹர் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எங்கெல்லாம் மேக்கப் பூசுறாங்க பாருங்க: நடிகை கயாடு லோஹர் பத்தொன்பதாம் நூற்றாண்டு படத்தில் கவர்ச்சி உடையில் தான் படம் முழுக்க நடித்திருப்பார். அவரது கைகளை தூக்கி ஒட்டுமொத்தமாக மண்ணும், ரத்தமும் கலந்த மேக்கப் எல்லாம் போட்டு அவரை சண்டைக் காட்சிகளில் நடிக்க வைத்துள்ளனர். அந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சியெல்லாம் ரொம்பவே ரசிகர்களை எமோஷனலாக்கி விடும். அந்த படத்திற்காக அவர் அதிகளவில் மெனக்கெட்டு நடித்த நிலையில், அந்த மேக்கப் வீடியோவை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். தமிழிலும் வெறும் கிளாமர் குயினாக நடிக்காமல் கயாடு லோஹருக்கு நல்ல நடிக்கக் கூடிய கதாபாத்திரங்களை இயக்குநர்கள் எழுதினால் சிறப்பாக இருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X