மேலாடையே இல்லாமல் அந்த மலையாளப் படத்தில் நடித்தாரே.. பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியான கயாடு லோஹர்!

சென்னை: ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார். இயக்குநராகவும் ஹீரோவாகவும் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த பிரதீப் ரங்கநாதன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் நடித்து வருகிறார்.

அந்த படம் உருவாகி வரும் நிலையில், அதற்கு நடுவே ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் டிராகன் படத்திலும் பிரதீப் ரங்கநாதன் நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு பேக் டு பேக் ஹிட்டாக லவ் இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் டிராகன் என இரு படங்கள் பிரதீப் ரங்கநாதனுக்கு வெளியாக காத்திருக்கின்றன.

kayadu lohar dragon pradeep ranganathan

ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் நடித்து வரும் பிரதீப் ஆண்டனிக்கு ஏற்கனவே அனுபமா பரமேஸ்வரன் ஜோடியாக நடித்து வரும் நிலையில் இன்னொரு மலையாள நடிகையும் தற்போது ஜோடி சேர்ந்துள்ளார்.

பிரதீப் ரங்கநாதனுக்கு 2 ஹீரோயின்: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்து வெளியான ஓ மை கடவுளே படத்தில் ரித்திகா சிங் மற்றும் வாணி போஜன் என இரண்டு ஹீரோயின்கள் நடித்திருந்தனர். இந்நிலையில் அதே போல தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து அவர் இயக்கி வரும் டிராகன் படத்தில் அனுபமா பரமேஸ்வரனை தொடர்ந்து மற்றொரு மலையாள நடிகையான கயாடு லோஹர் என்பவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

kayadu lohar dragon pradeep ranganathan


யார் இந்த கயாடு லோஹர்?: 2021 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான முகில் பேட்டை படத்தில் அறிமுகமான கயாடு லோஹர் 2022ம் ஆண்டு மலையாளத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டு எனும் படத்தின் மூலம் அறிமுகமானார். கடந்த 2023-ம் ஆண்டு மராத்தியில் வெளியான ஐ பிரேம் யூ படத்தின் மூலம் அங்கேயும் அறிமுகமான கயாடு லோஹர் இந்த ஆண்டு மீண்டும் மலையாளத்தில் வெளியான ஒரு ஜாதி ஜாதகம் படத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக தமிழில் டிராகன் படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார்.

kayadu lohar dragon pradeep ranganathan


மார்பை அறுத்து: மலையாளத்தில் வெளியானபத்தொன்பதாம் நூற்றாண்டு படத்தில் மார்பக வரிக்கு எதிராக போராடி தனது மார்பகங்களையே அறுத்து எடுத்துட்டுப்போ என சொல்லி ஆங்கிலேயரை அதிர வைத்த வீரப்பெண்மணி நங்கேலியாக நடித்து அசத்தியவர் தான் இந்த கயாடு லோஹர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் டிராகன் படத்தில் நடிக்கிறார் என்றால் வெயிட்டான ரோலாக இருக்குமா? அல்லது கவர்ச்சி ரோலாக இருக்குமா என்கிற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். மேலும், பிரதீப் ரங்கநாதன் கொடுத்து வைத்தவர் என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன. டிஜே டில்லு ஸ்கொயர் படத்தில் அனுபமா பரமேஸ்வரனே அப்படி லிப் லாக் அடித்தார். இதில், 2 மலையாள நடிகைகள் வேறு மச்சக்காரன் தான் பிரதீப் ரங்கநாதன் என நெட்டிசன்கள் கடுப்பாகி வருகின்றனர்.

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, சீமான் நடிப்பில் உருவாகி வரும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை எல்லா வகையிலும் டிராகன் படம் ஓவர்டேக் செய்துக் கொண்டே போகிறதே என்றும் இந்த படம் எப்போது வரும் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X