Kayadu Lohar: பீச்சு காத்து வாங்கும் கயாடு லோஹரைப் பார்த்து மூச்சு வாங்கும் இளசுகள்.. நீங்களே பாருங்க!

சென்னை: நடிகை கயாடு லோஹர் தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை. தமிழில் தான் அறிமுகமான டிராகன் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கவனம் ஈர்த்தவர். டிராகன் படம் வெளிவருவதற்கு முன்னரே சில படங்களில் கமிட் ஆனவர். தற்போது அதர்வாவுடன் இதயம் முரளி, ஜி.வி. பிரகாஷ் உடன் இம்மார்ட்டல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இது மட்டும் இல்லாமல் சிம்பு மற்றும் தனுஷ் படங்களிலும் கமிட் ஆகியுள்ளார் என கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் கடற்கரையில் செம ஜாலியா காத்து வாங்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறிய டிராகன் படத்தில், நடித்து தமிழில் அறிமுகமானார் கயாடு லோஹர். இதற்கு முன்னர் கன்னடம், தெலுங்கு, மலையாளம் என தமிழ் தவிர மற்ற தென்னிந்திய மொழிகளில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர். இவர் தமிழில் கமிட் ஆன முதல் படம் இதயம் முரளி. தயாரிப்பாளர் ஆகாஷ் பிரபு இயக்குநர் அவதாரம் எடுக்கும் இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக கமிட் ஆனார். இந்த படத்தின் வேலைகள் மெதுவாகவே நடந்து வருவதால், அதன் பின்னர் கமிட் ஆன டிராகன் படம் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் செம ஹிட் அடித்தது. இதில் கயாடு லோஹர் ஹோம்லி கலந்த கிளாமரில் ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

Kayadu Lohar Recent Beach Glamour Photos Goes Trending on Instagram
Photo Credit:

அதிர்ச்சி: கயாடு லோஹர் அடிப்படையில் அசாமைச் சேர்ந்தவர் என்பதால், அவர் தற்போது தமிழ் கற்றுக் கொண்டு வருகிறார். ஆனாலும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது அவர் கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் தமிழும் ரசிகர்கள் மத்தியில் அவரை கொண்டு சேர்த்துள்ளது. அண்மையில் கயாடு லோஹர் குறித்து ஒரு தகவல் இணையத்தில் பரவி பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தது. அதாவது தமிழ்நாடு டாஸ்மாக் ஊழலில் கயாடு லோஹருக்கு தொடர்பு உள்ளது என பலரும் புகைச்சலை கிளப்பினர். ஆனால் தமிழ்நாடு டாஸ்மாக் ஊழல் குறித்து விசாரித்து வரும் அமலாக்கத்துறை இது தொடர்பாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.

விலைமாது: கயாடு லோஹர் தற்போது தெலுங்கு படம் ஒன்றில் விலைமாதுவாக நடிக்க கமிட் ஆகியுள்ளார் என கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவியது. விலைமாதுவாக ஒரு நடிகை நடிக்கிறார் என்றாலே அந்த படத்தின் மீது தனி கவனம் குவிந்துவிடுகிறது. இந்திய சினிமாவிலேயே பல நடிகைகள் விலைமாது கதாபாத்திரங்களில் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார்கள். இப்படி இருக்கும்போது கயாடு லோஹர் விலைமாதுவாக நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்ற தகவலே தீ போல பரவியது.

Kayadu Lohar Recent Beach Glamour Photos Goes Trending on Instagram
Photo Credit:

கிளாமர்: இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வேகமாக பரவி வரும் புகைப்படங்கள் என்றால் அது கயாடு லோஹர் கடற்கரையில் காத்து வாங்கும் புகைப்படங்கள் தான். செம கிளாமரான உடையில் உள்ள கயாடுவின் புகைப்படங்களைப் பார்த்த இணையவாசிகள் சிலர், 'பீச்சு காத்து வாங்கும் கயாடு லோஹரைப் பார்த்து மூச்சு வாங்கும் இளசுகள்' என செல்லமாக கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X