பாலியல் தொழிலாளி கதாபாத்திரத்தில் கயாடு லோஹர்.. அட அந்த பெரிய ஹீரோ படத்தில் இப்படியொரு ரோலா?
ஹைதராபாத்: இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா மற்றும் நடிகர் நானி கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு 'தி பாரடைஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகை கயாடு லோஹர் போல்டான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழில் சட்டென கயாடு லோஹருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், மலையாளம் மற்றும் தெலுங்கில் பெரிய நடிகர்களின் படங்களில் கமிட் ஆகி வருகிறார்.
அசாமை சேர்ந்த கயாடு லோஹர் ஏற்கனவே மலையாளத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டு படத்தில் நங்கேலி கதாபாத்திரத்தில் செம போல்டாக நடித்திருந்தார். நானி நடிப்பில் உருவாகும் தி பாரடைஸ் திரைப்படம் ஹிட் 3 படத்தை விட பிளட் அண்ட் வாராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அறிமுக டீசரிலேயே ஆபாச வசனங்கள் நிறைந்து காணப்பட்ட அந்த படத்தில் பாலியல் தொழிலாளி கதாபாத்திரத்தில் கயாடு லோஹர் கமிட் ஆகியுள்ளாராம்.
பாலியல் தொழிலாளியாக கயாடு லோஹர்: 'தி பாரடைஸ்' திரைப்படத்தில் நானிக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே பிரதீப் ரங்கநாதன் நடித்த 'டிராகன்' திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர். நானி ரொம்பவே ரிஸ்க் எடுத்து வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் தி பாரடைஸ் படத்தில் கயாடு லோஹர் பாலியல் தொழிலாளி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த கதாபாத்திரத்திற்கு அதிக மன தைரியமும், அர்ப்பணிப்பும் தேவைப்பட்டதால் நடிக்க பல நடிகைகள் தயங்கிய நிலையில், கயாடு லோஹர் கமிட்டாகியுள்ளாராம்.
ஜான்வி கபூர் இல்லை: சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டரில் நானி சடாமுடியுடன் காட்சியளித்தார். ஒடுக்கப்பட்ட பழங்குடியினரின் வாழ்வியலையும், அவர்கள் சமூகத்தில் அங்கீகாரம் பெற போராடுவதையும் மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மோகன் பாபு, பாபு மோகன், ராகவ் ஜூயல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், நானியின் தாயாக மராத்திய நடிகை ஒருவர் நடிக்கவுள்ளார். முன்னதாக இந்த படத்தில் ஜான்வி கபூர் நடிப்பார் என தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அவர் நடிக்கவில்லை என்றும் கயாடு லோஹர் தான் நடிக்கப் போகிறார் என்பதும் உறுதியாகி உள்ளது. விரைவில், படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனிருத் இசை: நடிகர் ராகவ் ஜூயலின் பிறந்தநாளில், படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அதில் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா, ராகவின் கதாபாத்திரத்தை விவரித்தார். மேலும், ராகவ் மிரட்டும் தோற்றத்துடன் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் இயக்குநர் தெரிவித்தார்.
இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். இப்படம் ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் உலகம் முழுவதும் மார்ச் 26, 2026 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற மொழிகளில் பிசியான கயாடு லோஹர்: தமிழில் டிராகன் படத்தைத் தொடர்ந்து ஜி.வி. பிரகாஷ் உடன் இணைந்து இம்மார்ட்டல்ஸ் படத்தில் நடித்து வருகிறார் கயாடு லோஹர். இதயம் முரளி படம் அவர் நடிப்பில் உருவாகி ரிலீஸ் ஆகாமல் காத்துக்கிடக்கிறது. சிம்பு, தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் என தொடர்ந்து கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவார் என பார்த்த நிலையில், டொவினோ தாமஸ், நானி படங்கள் என மற்ற மொழிகளில் பிசியாகி விட்டார் கயாடு லோஹர்.


Click it and Unblock the Notifications











