நான் அந்த மாதிரி பொண்ணு இல்லை.. காதலில் மூழ்காத ஷிப்.. கயாடு லோஹர் சொன்ன புது வார்த்தை
சென்னை: பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் கயாடு லோஹர். ஒரே படத்தில் ரசிகர்களுக்கு பிடித்த நாயகியாக மாறிவிட்டார். இவர் கொஞ்சி பேசும் தமிழை கேட்பதற்கே தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. தமிழில் அடுத்தடுத்து படங்களில் நாயகியாக கலக்கி வரும் இவர் தற்போது காதல் குறித்து அளித்திருக்கும் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
மலையாளம், கன்னட படங்களில் நடித்து வந்த கயாடு லோஹர், தமிழில் வெளியான டிராகன் படத்தின் மூலம் ஒரே நாளில் புகழின் உச்சிக்கு சென்றார். இப்படத்தை பார்த்த அனைவரும் யார் இந்த கயாடு லோஹர் என இணையத்தில் தேட தொடங்கிவிட்டனர். பார்க்க கொழுக் மொழுக் என்று இருக்கும் அவரது சிரிப்பை பார்த்து ரசிக்க தொடங்கிவிட்டார்கள். அதேபோன்று கல்லூரி விழாக்களில் கலந்துகொண்ட காயடு லோஹர் விஜய் எனக்கு பிடித்த நடிகர் என்றும் அவர் படத்தில் நடிக்கை ஆசை என்றும் கூறினார். இது போதுமே தமிழ் ரசிகர்களுக்கு என்பது போல் சமூகவலைதள பக்கங்கள் அனைத்தும் கயாடு லோஹர் பீவர் தொற்றிக் கொண்டது. அந்தளவிற்கு ரசிகர்கள் அவர் மீது அன்பை பொழிந்தனர்.

இதயம் முரளி: டிராகன் படத்தின் வெற்றியை தொடர்ந்து கயாடு லோஹர் அதர்வாவுடன் இதயம் முரளி படத்தில் நடிக்க கமிட் ஆனார். இப்படத்தின் அறிமுக விழாவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. வெளிநாடுகளில் நடந்து வரும் படப்பிடிப்பின் போது கயாடு லோஹர் தனது 25ஆவது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். இதைத்தொடர்ந்து படத்தின் போஸ்டர் மற்றும் முதல் பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எப்போதும் சோஷியல் மீடியாவில் கலகலப்புடன் ஆக்டிவாக இருக்கும் கயாடு மறைமுகமாக எஸ்டிஆர் படத்தில் நடிக்க இருப்பதாக ரசிகர்களுக்கு ஹின்ட் கொடுத்தார்.
எஸ்டிஆர் 49: கயாடு கூறியது போலவே எஸ்டிஆர் 49 படத்தில் நடிப்பது உறுதியானது. கடந்த வாரம் இவர் சிம்புவுக்கு ஜோடியாக நடிப்பதை தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்தது. டிராகன் படத்திற்கு பிறகு முன்னணி ஹீரோவுடன் நடிக்கும் முதல் படம் இதுதான். இதனால் குதூகலத்துடன் இருக்கும் கயாடு லோஹர் கல்லூரி விழாக்களுக்கு அழைத்தால் நோ சொல்வதில்லை உடனே செல்ல தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். அட இந்த பொண்ணு வித்தியாசமானவங்களா இருக்காங்களே என கோலிவுட்டே வியக்கிறதாம்.

ரொம்ப நல்ல பொண்ணு: எஸ்டிஆர் 49 படத்தில் கமிட் ஆன பிறகு உற்சாகத்தோடு இருக்கும் கயாடு லோஹர் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வதாகக் கூறப்படுகிறது. அதே பொன் சிரிப்பு இன்னும் மாறவில்லை என்றும் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், காதல், ஜென் சி, ரிலேஷன்ஷிப் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அப்போது கலகலப்பாக சிரித்துக்கொண்டே பதில் அளித்த கயாடு லோஹர், "இன்றைய தலைமுறை புதுப்புது வார்த்தைகளுக்கு புதுப்புது அர்த்தங்களை கண்டுபிடித்து வருகிறார்கள். எனக்கு தெரிந்த ஷிப் எல்லாம் கப்பல் தான். நீங்கள் கூறுவது போல் இப்போது ரிலேஷன்ஷிப் சிச்சுவேஷன்ஷிப் என்று ஏராளமான ஷிப்'கள் வந்து விட்டன. நீங்க நினைக்கிற மாதிரியான பொண்ணு நான் இல்லை. நான் ரொம்ப நல்ல பொண்ணு. நான் இப்போது எந்த ஷிப்பிலும் இல்லை. அவ்வளவு எளிதாக எதிலும் மாட்டிக்கொள்ள மாட்டேன்" என தெரிவித்துள்ளார். இதை பார்த்து ரொம்ப விவரமான பெண்ணாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











