உங்களோட க்ரஷ் கயாடு லோஹரா?.. அவங்களோட செலிபிரிட்டி க்ரஷ் யாரு தெரியுமா?.. டிரெண்டிங்கே தெறிக்குது!

சென்னை: கடந்த ஆண்டு பிரேமலு படத்திற்கு பிறகு தென்னிந்திய ரசிகர்கள் எல்லாம் மமிதா பைஜு ஃபேனாக மாறியிருந்தனர். அவருக்கும் அதிரடியாக தளபதி விஜய்யின் ஜன நாயகன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில், ரசிகர்களின் க்ரஷ்ஷாக இந்த ஆண்டு அதிரடியாக கோலிவுட்டின் புது வரவு கயாடு லோஹர் மாறியுள்ளார்.

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 21ம் தேதி வெளியான படம் டிராகன். இரண்டு வாரங்களில் 110 கோடி வசூல் செய்து மிகப்பெரிய வெற்றிப் படமாக டிராகன் மாறியிருக்கிறது. ட்ரை மாதம் என சொல்லப்பட்ட பிப்ரவரி மாதத்திலும் ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைத்துக் கொண்டிருக்கிறது.

Kayadu Lohar Vijay heroine

இந்த வாரம் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் கூட பெரிதாக ரசிகர்களை என்டர்டெயின் செய்யாது என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த வாரமும் டிராகன் திரைப்படம் கல்லா கட்டும் என்றும் கயாடு லோஹரின் தொடையழகை பார்க்கவே ரசிகர்கள் தியேட்டரை நோக்கி படையெடுக்கின்றனர் என்றும் கூறுகின்றனர்.

ராஷ்மிகா இல்லை இவங்கதான்: கீத கோவிந்தம் படம் வெளியான போது "இன்கேம் இன்கேம் காவாலே" பாடலில் விஜய் தேவரகொண்டா பின்னாடி பார்த்து விடப் போகிறார் என ஆடைகளை அட்ஜெஸ்ட் செய்து அமரும் ராஷ்மிகா மந்தனாவை பார்த்து அப்படியே அவர்மீது ரசிகர்கள் பித்துப் பிடித்துப் போனார்கள். என்ன பொண்ணுடா இவ என நேஷ்னல் க்ரஷ்ஷாகவே மாற்றினர். அதே அளவுக்கு அன்பை தற்போது டிராகன் படத்திற்கு பிறகு இந்த ஆண்டு கயாடு லோஹருக்கு தென்னிந்திய ரசிகர்கள் கொடுத்துள்ளனர்.

Kayadu Lohar Vijay heroine

150 கோடி வசூல் வருமா?: பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே திரைப்படம் 100 கோடி வசூல் செய்ததாக கூறப்படும் நிலையில், டிராகன் திரைப்படம் 110 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக அர்ச்சனா கல்பாத்தியே அட்டகாசமாக கேக் வெட்டி படக்குழுவுடன் கொண்டாடியுள்ளனர். அனுபமா பரமேஸ்வரன் இன்னொரு ஹீரோயினாக நடித்திருந்தாலும் "வழித்துணையே" என ரசிகர்கள் கொண்டாடுவது கயாடு லோஹரைத்தான். கண்டிப்பாக இந்த வாரமும் டிராகன் படம் ஹவுஸ்ஃபுல்லாக ஓடினால் 150 கோடி வசூலை கடக்கும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. 37 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் இந்தளவுக்கு வசூல் செய்வது ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு எங்கேயோ மச்சம் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். கயாடு லோஹர் தான் அந்த பெரிய மச்சம் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

தளபதி தான் என்னோட க்ரஷ்: கயாடு லோஹரை பல இளைஞர்களும் க்ரஷ் என கொண்டாடி வரும் நிலையில், தளபதி விஜய் தான் என்னோட செலிபிரிட்டி க்ரஷ் என கயாடு லோஹர் சேலம் தனியார் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் சொல்லியிருப்பதை பார்த்த விஜய் ரசிகர்கள் தூக்கிட்டு வாங்கடா அந்த செல்லத்தை என #KayaduLohar ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். கில்லி படத்தின் அப்படிப்போடு பாடலுக்கு அவர் மாணவர்களுடன் நடனமாடினார்.

Kayadu Lohar Vijay heroine

அந்த படம் தான் ரொம்ப பிடிக்கும்: வெறும் தளபதி என்று மட்டும் சொல்லிவிட்டு கயாடு லோஹர் நகர்ந்திருந்தால் கூட ஹேட்டர்கள் வேறு நபர்களை குறிப்பிட்டு விடுவார்களோ என்பதற்காக தெள்ளத் தெளிவாக அவர் நடித்த தெறி படம் தான் தனக்கு ரொம்பவே ஃபேவரைட் படம் என்றும் கூறிய கயாடு லோஹரை ரசிகர்கள் கொஞ்சி வருகின்றனர். டிராகன் படத்தைத் தொடர்ந்து அதர்வா நடித்து வரும் இதயம் முரளி படத்திலும் இவர்தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X