கயாடு லோஹருக்கு திடீரென என்ன ஆச்சு?.. இன்ஸ்டாகிராமில் இப்படியொரு போஸ்ட் போட்டுருக்காங்களே!
சென்னை: அசாம் மாநிலத்தில் பிறந்து கேரளாவில் சில போல்டான படங்களில் நடித்து பிரபலமான கயாடு லோஹர் தமிழில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக டிராகன் படத்தின் மூலம் அறிமுகமாகி கோலிவுட் ரசிகர்களை கவர்ந்தார்.
அதன் பின்னர் தமிழில் அவர் நடிப்பில் உருவாகி வரும் இதயம், இம்மார்ட்டல் உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றன. மீண்டும் மலையாளத்துக்குச் சென்று டொவினோ தாமஸ் உடன் நடித்த கயாடு லோஹரின் பள்ளிச்சட்டம்பி திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை.

துல்கர் சல்மானின் ஐ அம் கேம், நானியின் பாரடைஸ், மாரி செல்வராஜின் மஞ்சணத்தி என பல படங்களில் பிசியாக நடித்து வரும் கயாடு லோஹர் திடீரென சோஷியல் மீடியாவுக்கு இடைக்கால தடை என்பது போன்ற அறிவிப்பை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சோஷியல் மீடியா பக்கம் வரமாட்டேன்: உடலுக்கு கொடுப்பதை போலவே மனதுக்கும் சில காலம் ஓய்வு கொடுக்க வேண்டியது அவசியம். சமூக வலைதளங்கள் வாயிலாக ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருப்பது எனக்கு ரொம்பவே மன மகிழ்ச்சியை தந்தாலும், தற்போது சிறிது காலம் சோஷியல் மீடியாவை விட்டு விலகியிருக்க முடிவு செய்துள்ளேன் என அதிரடியாக கயாடு லோஹர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ஃபாலோயர்களை அப்செட் ஆக்கியுள்ளார்.
திடீரென என்ன ஆச்சு?: 26 வயதாகும் கயாடு லோஹருக்கு இன்ஸ்டாகிராமில் 3.1 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோயர்களாக உள்ளனர். லோகேஷ் கனகராஜ் கூலி படத்துக்குப் பிறகு குவிந்த ட்ரோல்கள் காரணமாக கொஞ்ச நாட்கள் சோஷியல் மீடியாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். ஆனால், லேட்டஸ்ட்டாக கயாடு லோஹர் பற்றி பெரிதாக எந்தவொரு சலசலப்பும் இல்லாத நிலையில், அவர் ஏன் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சைபர் புல்லிங்?: இன்ஸ்டாகிராமில் இளம் பெண்களுக்கும் குறிப்பாக பிரபல நடிகைகளுக்கு ஏகப்பட்ட பேர் பர்சனல் மெசேஜ் அனுப்புகிறேன் என்கிற பேரில் சைபர் புல்லிங் செய்து வருகின்றனர். டிராகன் நடிகைக்கு அதுபோன்று ஏதாவது நடந்ததா? ஏன் திடீரென இப்படியொரு முடிவை மேற்கொண்டுள்ளார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. மாரி செல்வராஜின் மஞ்சணத்தி படத்தில் கமிட்டாகி உள்ள நிலையில், நடிப்பில் கவனம் செலுத்துவதற்கே சமூக வலைதளங்களை அவர் தவிர்க்க முடிவு செய்திருக்கலாம் என்றும் ரசிகர்கள் யூகங்களை கிளப்பி வருகின்றனர். எப்படியிருந்தாலும், இன்னும் சில காலம் இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்கு கயாடு லோஹரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் ஏதும் கிடைக்காது என்பது மட்டும் உறுதியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications