அழகா இருந்தாலும் இப்படியா சொல்றது...மாட்டிகொண்ட கயாடு லோஹர்..வீடியோ ஆதாரம்!

சென்னை: ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளம் என எந்த பக்கம் திரும்பினாலும், கயாடு லோஹரின் வீடியோ மற்றும் போட்டோக்கள் அதிகம் இடம்பெறுகின்றன. இன்றைய தேதியில் மமிதா பைஜூவை ஓரம் கட்டி ரசிகர்களின் சென்ஷேசனல் ஹீரோயினாகவும் உருவெடுத்துள்ளார். தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் நடித்து வந்தாலும், அம்மணி தமிழ் படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருவது அவரது ரீல்ஸ் வீடியோக்களை பார்த்தாலே தெரிகிறது. அதற்காக இப்படியா பொய் சொல்லி மாட்டிக்கொள்வது என நெட்டிசன்கள் கேள்வி கேட்க தொடங்கியுள்ளனர்.

ரசிகர் பட்டாளம்: டிராகன் படத்தின் ஹீரோயினாக அறிமுகம் ஆன கயாடு லோஹருக்கு ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு அதிகரித்து வருகிறது. தமிழ் சினிமா ரசிகர்கள் கயாடு லோஹரின் கால்களில் சிக்கி கொண்டனரோ என பலரும் கிண்டல் செய்தும் வருகின்றனர். அம்மணி ஒரு படம் தான் நடிச்சிருக்காங்க ஆட்டம் கொஞ்சம் ஓவரா இருக்கு என கிண்டல் செய்பவர்கள் கூட அவரது வீடியோவை பார்த்து ரசித்து கமண்ட் செய்கின்றனர்.

Kayadu lohar video kayadu lohar Celebrity crush vijay

Celebrity Crush: முதல் படமே 100 கோடி வசூலை ஈட்டியுள்ள குஷியில் இருக்கம் கயாடு லோஹர், தற்போது இதயம் முரளி படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சமீபத்தில் கல்லூரி விழாவில் கலந்துகொண்ட கயாடு லோஹர் மாணவிகளுடன் சேர்ந்து குத்தாட்டம் போடும் வீடியோ வைரலானது. செம குஷியில் பாடல்களுக்கு வைப்புடன் ஆட்டம் போட்டார்.

Kayadu lohar video kayadu lohar Celebrity crush vijay

அப்போது சிலர் அவரிடம் உங்களுடைய Celebrity Crush யார் என கேள்வி கேட்டனர். அவரும் கொஞ்சம் வெட்கத்துடன், தளபதி விஜய் தான் என்னுடைய Celebrity Crush என கூறினார். அதையும் தாண்டி விஜய் நடித்ததில் எனக்கு மிகவும் பிடித்த படம் தெறி தான் என்றும் தெரிவித்தார்.

Kayadu lohar video kayadu lohar Celebrity crush vijay

தங்க சிலை: கயாடு லோஹர் வீடியோவை பார்த்து புகழாத நாளே இல்லை. என்ன மமீதா பைஜூ நமக்கு கயாடு லோஹர்தான் என இன்ஸ்டா பக்கத்தில் கயாடுவின் இன்பாக்ஸ்களில் மெசேஜ் குவிந்த வண்ணம் உள்ளதாம். தங்க சிலை மாதிரி இருப்பதாகவும் வருணிக்க தொடங்கியுள்ளனர். இப்படியெல்லாம் கொஞ்சி திரியும் ரசிகர்களை கயாடு லோஹர் இப்படி ஏமாற்றலாமா என நெட்டிசன்கள் கேட்க தொடங்கியுள்ளனர். செலிபிரட்டி கிரஷ் விஜய்னு சொன்ன அதே கயாடு தான் வேறொரு நடிகரை பற்றி புகழ்ந்து பேசியுள்ளதாக குறை கூற தொடங்கி விட்டனர்.

Kayadu lohar video kayadu lohar Celebrity crush vijay

என்னமா இப்படி பன்றீங்களே: கல்லூரி விழாவில் விஜய் என்று சொல்லிவிட்டு ரசிகர்களுடனான இன்ஸ்டாகிராம் உரையாடலில், 'உங்களுக்கு பிடித்த ஹீரோ யார்' என ரசிகர் கேள்வி கேட்க, 'தனுஷ் தான் எனக்கு பிடிக்கும், வேறு யாருக்கும் இடமில்லை' என நடிகை கயாடு லோஹர் கூறியுள்ளார்.

இதை கவனித்த நெட்டிசன்கள் மாற்றி மாற்றி பேசி கயாடு லோஹர் மாட்டிக்கொண்டார் என தெரிவிக்கின்றனர். இதற்கு வீடியோ ஆதாரத்தையும் காண்பித்து கிண்டல் செய்ய தொடங்கியுள்ளனர். என்னம்மா இப்படி பன்றீங்களே என கமண்ட் பட்டன்களை தெறிக்க விட்டுள்ளனர். விடுங்கப்பா நம்ம கயாடு லோஹர் தான பொய் சொன்னாலும் அழகாத்தான் இருக்கு என்று பலரும் ஆதரவு தெரிவிக்கின்றனர்.

Kayadu lohar video kayadu lohar Celebrity crush vijay

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X