கண்களினால் வசனம் பேசிய கயல் பட நாயகி

By Mayura Akilan

கயல்', 'திரிஷா இல்லன்னா நயன்தாரா', சற்குணம் இயக்கத்தில் புதிய படம் என்று வரிசையாய் நிரம்பி வழிகிறது ஆனந்தியின் டைரி.

முதல்படமான பொறியாளன் இன்னும் வெளியாகவில்லை... தெலுங்கு ரக்ஷிதா தமிழில் ஆனந்தியாக மாறி பல படங்களில் நடித்து வருகிறார். பெயரை மாற்றியவர் கயல் இயக்குநர் பிரபுசாலமன்தானாம்.

கயல்விழி பெயருக்கு ஏற்றார்போல அழகான கண்கள் அமைந்திருக்கிறது ஆனந்திக்கு. எனவே தன்னுடைய கோபம், காதல், சிரிப்பு, என அனைத்து பாவங்களையும், படத்தில் பேசவேண்டிய வசனங்களையும் கண்களால் வெளிப்படுத்தியிருக்கிறார் என்று ஒரு பேட்டியில் இயக்குநர் பிரபுசாலமன் பாரட்டியிருக்கிறார்.

இந்த பாரட்டுதான் ஜி.வி.பிரகாஷ், அதர்வா என இளம் வயது ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பை கொடுத்துள்ளது ஆனந்திக்கு.

பேஷன் டிசைனிங் படிப்பு

பேஷன் டிசைனிங் படிப்பு

ப்ளஸ் டூ முடித்துவிட்டு பேஷன் டிசைனிங் படித்து வரும் ஆனந்திக்கு நடிப்பு கிளிக் ஆகிவிட்டது. எனவே இப்போது படிக்க நேரமில்லையாம்.

பைலட் ஆக ஆசை

பைலட் ஆக ஆசை

நடிக்க வராமல் இருந்திருந்தால் நிச்சயம் பைலட் ஆகியிருப்பாராம் ஆனந்தி.

வீட்டில் சுதந்திரம்

வீட்டில் சுதந்திரம்

சிறு வயதில் இருந்தே என்னோட கலை ஆர்வத்தை வீட்டில் ஊக்குவித்தார்கள். அவர்களின் தூண்டுதலால்தான் இப்போது இந்த இடம் வரைக்கும் வந்திருக்கிறேன் என்கிறார் ஆனந்தி.

கவிதை பாடும் கண்கள்

கவிதை பாடும் கண்கள்

ஆனந்தியின் கண்கள்தான் ப்ளஸ்பாயிண்ட்டாம். எனவே கயல்படத்தில் கண்களால்தான் அதிகம் வசனம் பேசி நடித்திருக்கிறாராம். படம் முழுக்க ஆனந்தியின் கண்களே அதிகம் நடித்திருக்கிறதாம்.

காதல் அம்புகள்

காதல் அம்புகள்

ஆனந்தியை இதுவரை யாரும் காதலிக்கவில்லையாம். ஆனந்தி, கோபக்கார பெண் மட்டுமல்லாது, பள்ளியில் வகுப்புத்தலைவியாக இருந்துள்ளாராம். அதனாலேயே அவரை யாரும் காதலிக்கவில்லையாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X