Kayal Anandhi: கணவன் மடியில் ’கயல்’ ஆனந்தி.. என்ன விசேஷம் தெரியுமா?.. வேறலெவல் ரொமான்ஸா இருக்கே!
சென்னை: கடந்த 2014 ஆம் ஆண்டு 'பொறியாளன்' மற்றும் 'கயல்' படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆனந்தி. தெலுங்கானாவை சேர்ந்த இவர் தெலுங்கில் சில படங்களில் நடித்து வந்தார். தமிழில் இவர் நடித்த 'கயல்' திரைப்படம் இன்று வரை இவருக்கு அடையாளமாக மாறி உள்ளது.
'கயல்' ஆனந்தி என அழைக்கப்படுவதும் இவர் 'பரியேறும் பெருமாள்', 'திரிஷா இல்லனா நயன்தாரா', 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு', 'கமலி ஃப்ரம் நடுக்காவேரி', 'கஸ்டடி', 'இராவண கோட்டம்', 'ஒயிட் ரோஸ்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மார்ச் மாதம் இவர் நடித்து வெளியாக இருந்த 'மங்கை' திரைப்படம் கடைசி நேரத்தில் அந்த படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கிய நிலையில் அந்த படம் அப்படியே ரிலீசாகாமல் நின்றுவிட்டது.
எளிமையான அழகு: 'கயல்' படத்திலிருந்து ஆனந்தி நடித்த ஒவ்வொரு படத்திலும் அவரது அழகு ரொம்பவே எளிமையானதாக கேர்ள் நெக்ஸ்ட் டோர் பெண் போலவே இருக்கும். அதன் மூலமாகவே அவர் ரசிகர்களை கவர்ந்தார். 'திரிஷா இல்லனா நயன்தாரா' படத்தில் மட்டும் படு கவர்ச்சியாக நடித்திருப்பார். 'பரியேறும் பெருமாள்' மற்றும் 'கமலி ஃப்ரம் நடுக்காவேரி' படங்களில் ஆனந்தி தனது நடிப்பால் அசத்தியிருப்பார். சமீபத்தில் வெளியான 'ஒயிட் ரோஸ்' படத்திலும் இவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.
2021-ல் திருமணம்: 30 வயதாகும் கயல் ஆனந்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உதவி இயக்குநரான சாக்ரடீஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மூடர் கூடம் படத்தை இயக்கிய நவீனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் தான் சாக்ரடீஸ். திருமணத்துக்கு பிறகு இருவருக்கும் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு பிளாட்டோ என்கிற பெயரை சூட்டி உள்ளனர்.

கணவன் மடியில் கயல் ஆனந்தி: கணவர் சாக்ரடீஸின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவரது மடியில் அமர்ந்தபடி எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கயல் ஆனந்தி 'Happy birthday to my everything' என பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து போஸ்ட் போட்டுள்ளார். கயல் ஆனந்தியின் கணவரின் பிறந்தநாளை அறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











