கயல் ஆனந்திக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. மாப்பிள்ளை இவர் தான்.. பிரபல சினிமா இயக்குநர் நேரில் வாழ்த்து!

சென்னை: நடிகை 'கயல்' ஆனந்திக்கு தொழிலதிபர் சாக்ரடீஸ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

தெலங்கானாவின் வாரங்கல் மாவட்டத்தில் பிறந்த ஆனந்தி, கடந்த 2014ம் ஆண்டு பொறியாளன் மற்றும் கயல் படங்களின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

தெலுங்கில் முன்னதாக 2012ம் ஆண்டு ஈ ரோஜுலு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ஆனந்தி.

எளிமையான நடிப்பு

எளிமையான நடிப்பு

ஹீரோயின் என்கிற எந்தவொரு பந்தாவும் இன்றி, பக்கத்து வீட்டு பெண் கதாபாத்திரத்தில் மிகவும் எளிமையான தனது நடிப்பை ஒவ்வொரு படத்திலும் 'கயல்' ஆனந்தி வெளிப்படுத்தி வந்தார். கயல் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அவருக்கு மாநில விருதும் விஜய் டிவியின் விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அந்த படத்திற்கு பிறகு 'கயல்' ஆனந்தி என்றே வெகுவாக அழைக்கப்பட்டு வருகிறார்.

நல்ல கதைத் தேர்வு

நல்ல கதைத் தேர்வு

கிடைக்கிற வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொண்டு நடித்துத் தள்ள வேண்டும் என்று நினைக்காமல், நல்ல நல்ல கதைகளாக தேர்வு செய்து நடித்து வருபவர் கயல் ஆனந்தி. கயல், விசாரணை, பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, அலாவுதினும் அற்புத கேமராவும், ராவணக் கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சில படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.

திடீர் திருமணம்

திடீர் திருமணம்

நடிகை கயல் ஆனந்திக்கு இன்று திருமணம் ஆகப் போகிறது என்கிற அறிவிப்பே ரகசியமாகவே இருந்தது. இந்நிலையில், இன்று திடீரென அவசர அவசரமாக தெலங்கானாவை சேர்ந்த சாக்ரடீஸ் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்திற்கு சினிமா பிரபலங்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகின.

வாழ்த்திய இயக்குநர்

வாழ்த்திய இயக்குநர்

இந்நிலையில், வாராங்கல்லில் உள்ள கோடெம் கன்வென்சன் சென்டரில் வியாழனன்று இரவு 8 மணிக்கு நடைபெற்றது. தற்போது மணமக்களை மூடர்கூடம் இயக்குநர் நவீன் வாழ்த்தும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. இருவரும் இணைந்து அலாவுதினும் அற்புத கேமராவும் படத்தில் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் வாழ்த்து

ரசிகர்கள் வாழ்த்து

திடீரென நடிகை கயல் ஆனந்திக்கு கல்யாணம் ஆகிடுச்சு என்கிற சேதி கேட்டதும், ஏகப்பட்ட ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். திரிஷா இல்லைன்னா நயன்தாரா படத்தில் நடித்து ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்தவருக்கு இவ்ளோ சீக்கிரம் திருமணமா என அதிர்ச்சி அடைந்தாலும், மணமக்கள் நன்றாக வாழவேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X