Dushara Vijayan: பொத்தி வச்ச மல்லிகை மொட்டு.. பூத்துருச்சு வெட்கத்தை விட்டு.. பிகினியில் துஷாரா!
சென்னை: கழுவேத்தி மூர்க்கன் ரிலீஸ் ஆன உடனே 2ம் நாளே படக்குழு சக்சஸ் மீட் நடத்திய நிலையில், நடிகை துஷாரா விஜயன் பிகினி உடையில் தனது சம்மர் ஹாலிடேவை ஜமாய்த்து வருகிறார்.
போதை ஏறி புத்தி மாறி படத்தின் மூலம் கடந்த 2019ல் ஹீரோயினாக அறிமுகமானவர் துஷாரா விஜயன்.
வருஷத்துக்கு ஒரு படம் என்கிற நிலையில் தான் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

போல்டான நடிகை துஷாரா விஜயன்:
டஸ்க்கி ஸ்கின் டோனில் இருப்பவர்களுக்கு பெரும்பாலும் ஹீரோயின் வாய்ப்பு பெரிதாக அமைவதில்லை. அப்படியொரு சாபக்கேடு இந்திய சினிமாவை இன்னமும் பீடித்துள்ளது. ஆனாலும், தங்களது திறமையால் ஒரு சில நடிகைகள் ஷைன் ஆகி வருகின்றனர்.
அப்படி தனித்திறமை மூலமாக ஹீரோயினாக மாஸ் காட்டி வருகிறார் துஷாரா விஜயன். 2019ல் போதை ஏறி புத்தி மாறி படத்தில் அறிமுகமான அவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை படத்தின் மூலமாக பிரபலமானார். மீண்டும் பா. ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான நட்சத்திரம் நகர்கிறது படத்தில் ரெனே எனும் போல்டான கதாபாத்திரத்தில் நடித்து ஏகப்பட்ட விருதுகளை குவித்தார்.

கழுவேத்தி மூர்க்கன் படத்தில் செம க்யூட்:
சார்பட்டா பரம்பரை படத்தில் பீரியட் சென்னை பொண்ணாக நடித்த துஷாரா விஜயன், நட்சத்திரம் நகர்கிறது படத்தில் மாடர்ன் கேர்ளாக வலம் வந்தார். இந்நிலயில், இந்த வாரம் வெளியான அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன் படத்தில் கிராமத்து பெண்ணாக கலக்கி உள்ளார்.
ப்ளூ சட்டை மாறன் வழக்கமாக ஹீரோயின்களை லூசு ஹீரோயின்கள் என கிண்டலடிப்பார். ஆனால், துஷாரா விஜயன் போர்ஷன் தான் அந்த படத்திலேயே நம்மை சீட்டில் உட்கார வைக்கிறது என பாராட்டி உள்ளார்.

பிகினி உடையில் துஷாரா:
கழுவேத்தி மூர்க்கன் படத்தின் ப்ரமோஷனுக்காக பல மீடியாக்களுக்கும் யூடியூப் சேனல்களுக்கும் பேட்டி அளித்து வந்த துஷாரா விஜயன் படங்களை ரொம்பவே தேர்வு செய்து தான் நடித்து வருகிறேன் என்றார். சில நடிகைகள் வாரம் வாரம் ஒரு படம் பண்ணி வரும் சூழலில் வருஷத்துக்கு ஒரு படமே பெரிய விஷயம் என்கிற ரேஞ்சில் நடித்து வரும் துஷாரா படம் ரிலீஸ் ஆன நிம்மதியில் தனது ஹாலிடேவை கொண்டாட ஆரம்பித்துள்ளார்.
நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்த சில புகைப்படங்களை பதிவிட்ட துஷாரா விஜயனை பார்த்து ஸ்டன்னான ரசிகர்கள் "பொத்தி வச்ச மல்லிகை மொட்டு பூத்துருச்சு வெட்கத்தை விட்டு" என பாடல் வரிகளை எல்லாம் போட்டு கமெண்ட் செய்து ஜொள்ளு விட்டு வருகின்றனர். அடுத்ததாக எந்த படத்தில் துஷாரா நடிக்கப் போகிறார் என்பதை அறிந்து கொள்ளவும் அவரது ஆர்மி ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











