»   »  கரெக்ட் கீரத்..

கரெக்ட் கீரத்..

Posted By:
Subscribe to Oneindia Tamil
சரண் இயக்கும் வட்டாரம் படத்துக்கு ஒரு வழியாக ஒரு அட்டகாச ஹீரோயின் செட் ஆகிவிட்டார்.

இதில் முதலில் தெலுங்கைச் சேர்ந்த பிகர் அனுஷ்கா தான் நடிப்பதாக இருந்தது. ஆனால், முதலில் அட்வான்ஸைவாங்கிவிட்டு பின்னர் அதிக காசு தரும் தெலுங்கில் புது படங்கள் புக் ஆனதால், கால்ஷீட் லேது என்றுகடுப்படித்தார் அனுஷ்கா.

இதையடுத்து அவருக்காக வெயிட் எல்லாம் பண்ண முடியாது என்று படத்திலிருந்து அனுஷ்காவைதூக்கிவிட்டார் சரண்.

இதையடுத்து ஹீரோயின் வேட்டை தீவிரமாக நடந்தது. சரணின் அறிமுகங்கள் எப்போதும் ஒரு சின்னரவுண்டாவது அடிப்பார்கள் என்பதால் இந்த சான்ஸை பிடிக்க பெரும் போட்டி நடந்தது.

மும்பை, ஆந்திராவில் இருந்து ஏகப்பட்ட சுந்தரிகள் சரணிடம் சான்ஸ் பிடிக்க அலை மோதின. அமோகா, பூஜா,கிரண், காம்னா, மானு என அஜலகுஜல ஐட்டங்களை அறிமுகப்படுத்தியவராயிற்றே.. அவ்வளவு சீக்கிரத்தில்ஆளை செலக்ட் செய்துவிடுவாரா?

பல செஷன்கள் நடத்தி கடைசியில் கீரத் படேல் என்ற பெண்ணை தேர்வு செய்துவிட்டார். இவருக்கு சினிமா தான்புதுசே தவிர, கேமரா புதிதல்ல.

ஏகப்பட்ட பாஸ்ட் மூவிங் ப்ராடெட்ஸ்களுக்கு மாடலாக இருந்தவர் தான் கீரத். பல டிவி விளம்பரங்களில் இவரைகாலேஜ் கேர்ளாக, குழந்தைக்கு அம்மாவாக பார்த்திருப்பீர்கள்.

ஒரு புடவை விளம்பரத்தில் கூட நடித்திருந்தார்.

கீரத்துக்கு சொந்த ஊர் டெல்லியாம். ஆந்திராவில் பட வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தவர் ஆல்பங்களை எடுத்துஅலைய விட அது சரணிடம் வர, தன்னை நாடி வந்தவர்களையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு இவரைஹீரோயினாக்கிவிட்டார்.

கீரத் ஒல்லி தான் என்றாலும் கூட கரெக்டாக இருக்கிறார்.

ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கப் போகும் கீரத்திடம் இது பற்றிக் கேட்டால், ஐஸ்வர்யா ராய்க்கே சினிமா எண்ட்ரிகிடைத்தது தமிழில் தானே. இது மிக லக்கியான பிளேஸ். நானும் அவரைப் போலவே வளர்வேன் என்கிறார்.

இந்திக்குப் போய்விடுவேன் என்பதைத் தான் இப்படிச் சொல்கிறாரோ?

கீரத் என்ற பெயர் என்னமோ போல இருப்பதால் தமிழுக்கு ஏற்ற மாதிரி பெயரை மாற்றி வைக்கப் போகிறாராம்சரண்.

அரை கீரை என்று வைக்காமல் இருந்தா சரி...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil