»   »  கற்கும் கீர்த்தி சாவ்லா

கற்கும் கீர்த்தி சாவ்லா

Subscribe to Oneindia Tamil

கீர்த்தி சாவ்லா படு சந்தோஷமாக இருக்கிறார். ஆழ்வார் படத்தைத் தொடர்ந்து அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வருகிறதாம்.

ஆணை படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் கீர்த்தி. அதன் பிறகு சிற்சில படங்களில் தலையைக் காட்டி வந்தார். செமத்தியான திறமை, கலக்கலானகிளாமர் என பக்காவாக இருந்தும் கீர்த்திக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

ஆனால் ஆழ்வார் படத்திற்குப் பிறகு புதுப் பட வாய்ப்புகள் மளமளவென குவிந்து வருகிறதாம். கிளாமராக நடிப்பதற்கு கீர்த்தி ஸாரியேசொன்னதில்லை. அதேசமயம் நன்றாகவும் நடிப்பதால் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என்ற அடிப்படையில்,கீர்த்தியை நடிக்க வைக்க இயக்குநர்களிடையே நல்ல ஆர்வம் காணப்படுகிறது.

கீர்த்தியும் இதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு வருகிற வாய்ப்புகளையெல்லாம் வாரிப் போட ஆரம்பித்துள்ளார். அத்தோடு நில்லாமல் தமிழில்நன்றாகப் பேச வேண்டும் என்ற ஆர்வத்தில் தமிழும் கற்க ஆரம்பித்துள்ளாராம்.

இதற்காக ஒரு தமிழ் வாத்தியாரை ஏற்பாடு செய்து தினசரி தமிழ் கற்று வருகிறாராம். இதற்கு அந்த வாத்தியாருக்கு தினசரி 200 ரூபாய் சம்பளமும்கொடுக்கிறாராம். வந்த புதிதில் இருந்ததை விட இப்போது நாலு வார்த்தைகள் கூடுதலாக தமிழில் பேச முடிகிறதாம். விரைவில் பொளந்துகட்டுவேன் பாருங்க என்று சவாலும் விடுகிறார்.

கீர்த்தி தற்போது நடித்து வரும் சூர்யா என்ற படத்தில் கிளாமரில் பிச்சுக் கட்டி வருகிறாராம். சண்டை மாஸ்டர் ஜாகுவார் தங்கத்தின் மகன்சிரஞ்சீவிதான் இதில் ஹீரோ. இதில் கீர்த்திக்கு பின்னி எடுக்கும் வகையில் கிளாமர் காட்சிகளை அமைத்துள்ளாராம் படத்தை இயக்கியும் வரும்ஜாகுவார்.

சமீபத்தில் ஒரு காட்சியின்போது நிஜ பாம்பை தூக்கி கீர்த்தியிடம் போட அவர் பயந்து அலறியது தெரிந்திருக்குமே!

இப்படத்தில் நீபாவும் இருக்கிறார். அவரும் கிளாமரில் கடைந்தெடுத்து வருகிறாராம். கீர்த்தியோடு கடும் போட்டி போடுகிறாராம்.

இவர்களின் போட்டா போட்டி கிளாமரால் சூர்யா படு கூலாக வளர்ந்து வருகிறது. கீர்த்தி முடிவெடுத்துட்டாப்ல, இனி ரசிகர்களுக்குக்கொண்டாட்டம்தான்!

Read more about: keerthi chawla learns tamil

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil