»   »  கீர்த்தி கண்ணகி சாவ்லா!

கீர்த்தி கண்ணகி சாவ்லா!

Subscribe to Oneindia Tamil

கீர்த்தி சாவ்லா முற்றிலும் புதிய வேடத்தில் நடிக்க என் கணவன் எனக்கே சொந்தம் என்ற பெயரில் புதிய படம் உருவாகிறது.

கோவலன், மாதவி வீட்டுக்குப் போனபோது, கணவரின் மனம் நோகக் கூடாது என்பதற்காக மெளனம் காத்தவள்கண்ணகி. ஆனால் கணவன் வழிமாறி இன்னொரு பெண்ணை நாடியதை அறிந்து அவளிடமிருந்து கணவனை போராடி மீட்கிறாள்நவீன கண்ணகி.

இப்படிப்பட்ட சூப்பர் ரோலில் கீர்த்தி சாவ்லா, என் கணவன் எனக்கே சொந்தம் படத்தில் நடிக்கிறார். தன்னை விட்டுஇன்னொரு பெண்ணின் மீது நாட்டம் கொள்ளும் கணவனை எப்படி கீர்த்தி மீட்கிறார் என்பதுதான் படத்தின் முக்கியக்கதையாம்.

கணவனின் விருப்பம் அறிந்து அதற்கேற்ப மாறி, அவனது சின்ன வீட்டுக் கனவை முறியடிக்கிறாள் இந்த நவீன கண்ணகி.இப்படிப்பட்ட ரோலில் நடிக்க கேட்டபோது, உடனே ஒத்துக் கொண்டாராம் கீர்த்தி.

இந்த மாதிரி ரோல்களில் நடிப்பதுதான் சவாலான விஷயம். அதை நான் விருப்பப்பட்டு ஏற்றேன். மிகவும்இன்டரஸ்டிங்கான கேரக்டர். இன்னும் சொல்வதானால் அதிரடியான பெண் கேரக்டர். ஒவ்வொரு குடும்பப் பெண்ணுக்கும்இந்த கேரக்டர் ஒரு ரோல் மாடலாக மாறக் கூடிய வாய்ப்புகள் உள்ளன என்கிறார் பெருமையாக.

கீர்த்தி சாவ்லாவின் கணவர் வேடத்தில் ஸ்ரீமன், புதுமுகம் சாகியா (இவர்தான் மாதவியாக நடிப்பவர்), நிழல்கள்ரவி உள்ளிட்ட பலரும் படத்தில் உள்ளனர்.

படத்தை காதல், காமம், கிரைம், காமெடி என எல்லாம் கலந்து சூப்பர் மிக்ஸ் ஆக உருவாக்கி வருகிறாராம்இயக்குநர் பரத். இந்தப் படம் எல்லோரையும் கவரும், குறிப்பாக பெண்களை ரொம்பவே ஈர்க்கும் என்கிறார்.

அப்ப இது படம் அல்ல, பாடம்!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil