»   »  ரகளையான அரபுக் குதிர!

ரகளையான அரபுக் குதிர!

Subscribe to Oneindia Tamil

உசரமான நமீதாவுக்கு படு போட்டியாக ராஜஸ்தானிலிருந்து வந்து இறங்கியுள்ளார் அழகுக் குதிரை கீர்த்தி, அரபுக் குதிர மூலமாக.


தமிழ் சினிமாவில் கவர்ச்சிகரமான நாயகிகளுக்குப் பஞ்சமே இல்லை. ஒவ்வொரு நாயகியும் ஒருவித கவர்ச்சி திறமையுடன் இருப்பதால் ரசிகர்களுக்கு விதம் விதமான கவர்ச்சி விருந்து கிடைத்து விடுகிறது.

இப்போதைக்கு தமிழ் சினிமாவில் கவர்ச்சி திலகமாக இருப்பவர் நமீதாதான். ஆனால் அந்த நமீதாவேக்கு ஆப்பு வைக்கும் அளவுக்கு படு அட்டகாசமாக ராஜஸ்தானிலிருந்து வந்திறங்கியுள்ளார் கீர்த்தி.

நமீதாவின் உயரம், கிறங்கடிக்கும் அழகு, மயங்கடிக்கும் கிளாமர் என பிரம்மனின் ஸ்பெஷல் எடிஷனாக, ப்யூட்டிஃபுல் க்வீனாக இருக்கிறார் கீர்த்தி.

கீர்த்தியின் பூர்வாங்கப் பெயர் ஆர்த்தி கைதான். பூர்வீகம் ராஜஸ்தான். தமிழுக்கு வருவற்கு முன்பே ராஜஸ்தானில் நடிகையாக முன்னனுபவம் இருக்கிறதாம்.

ராஜஸ்தான் சினிமா மார்க்கெட் மிகச் சிறியதாம். இதனால் வெளியில் எங்காவது போகலாமா என்று யோசித்ததபோது கோலிவுட் போய் விடு, செம டப்பு என்று பலரும் கூறியுள்ளனர். இதையடுத்து நேராக சென்னைக்கு வந்து இறங்கி விட்டார்.

அரபுக்குதிர படத்தில கீர்த்தி கிளாமர் ரேஸில் பிய்த்து எடுத்துள்ளாராம். நண்பர் ஒருவர் மூலமாகத்தான் தமிழ் சினிமா வாய்ப்பு கிடைத்ததாம். எனது உயரம், அழகு, கிளாமர் ஆகியவற்றைப் பார்த்த அவர், நிச்சயம் தமிழ் சினிமாவில் உனக்கு சூப்பர் எதிர்காலம் உண்டு என்று அவர் சொல்லச் சொல்ல எனக்கு ஆசையாகி விட்டது.

என்னைத் தேர்வு செய்ததற்கு இன்னொரு காரணத்தையும் சொன்னார்கள். அதாவது படத்தின் பெயருக்கேற்ப நீங்கள் இருக்கிறீர்கள் என்று சொன்னபோது, அவர்களின் வெளிப்படையான பேச்சு எனக்குப் பிடித்து விட்டது. உடனே ஓ.கே. சொல்லி விட்டேன் என்கிறார் புல்லரிக்க வைக்கும் புன் சிரிப்புடன்.

சும்மா சொல்லக் கூடாது, நாலு நமீதாவையும், இரண்டு நக்மாவையும் சேர்த்து வைத்து செய்த சிற்பம் போல படு சிறப்பாக இருக்கிறார் கீர்த்தி. கிளாமரில் படு துள்ளலாக இருக்கிறாராம். நமீதாவை சீக்கிரமே தூக்கி சாப்பிட்டு விடுவார் என்கிறார்கள்.

சபாஷ்,சரியான போட்டி!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil