»   »  மதம் மாறிய கீர்த்தி சாவ்லா!

மதம் மாறிய கீர்த்தி சாவ்லா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
பிறகு நாயகி கீர்த்தி சாவ்லா, புத்த மதத்திற்கு மாறி விட்டாராம். சமீபத்தில் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ராஜராஜேஸ்வரர்கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டார் நடிகை மீரா ஜாஸ்மின்.

கிறிஸ்தவரான மீரா எப்படி கோவிலுக்குள் நுழையலாம் என்று அவரிடம் கோவில்பாதுகாவலர்கள் கேட்டபோது, மீரா இந்து மதத்திற்கு மாறி விட்டதாக கூறி அங்கிருந்துஅவரை மீட்டுச் சென்றார் உடன் இருந்த தயாரிப்பாளர்.

ஆனால் தான் மதம் மாறவில்லை என்று அடுத்த நாள் கூறி பரபரப்பை மேலும்அதிகரித்தார். ஆனால் நிஜமாகவே ஒரு நடிகை மதம் மாறி விட்டார். மாறியவர் கீர்த்திசாவ்லா. மாறிய மதம் பெளத்தம்.

ஆணை படத்தில் அர்ஜூடன் அசத்தல் ஜோடி போட்டவர்தான் கீர்த்தி சாவ்லா.இடையில் காணாமல் போன அவர் இப்போது கை நிறையப் படங்களுடன்கோலிவுட்டைச் சுற்றி வருகிறார்.

உயிர் எழுத்து, வேட்டை, 1966, பிறகு என ஏகப்பட்ட படங்களுடன் கீர்த்தி படுபிசியாக நடித்து வருகிறார். இந்த பிசியான நேரத்திலும் அவரால் பக்திக்கும் நேரம்ஒதுக்க முடிந்ததுதான் ஆச்சரியம்.

புத்த மதம் குறித்துக் கேள்விப்பட்ட அவர் புத்தரின் வாழ்க்கை வரலாற்றை ஆழமாகபடித்துள்ளார்.

புத்தரின் வாழ்க்கை வரலாற்றால் ஈர்க்கப்பட்ட அவர் சொந்த ஊரான மும்பைக்குச்செல்லும்போதெல்லாம் அங்குள்ள புத்தர் கோவிலுக்குப் போய் அங்கு நடக்கும்சொற்பொழிவுகளை கேட்க ஆரம்பித்தார்.

கடைசியில் புத்த மதத்தின் மீது ஈடுபாடு அதிகமாகி இப்போது அந்த மதத்தில் சேர்ந்துவிட்டாராம் . இப்போது தினசரி காலை, மாலை நேரங்களில் புத்தரின் போதனைகளைபடிக்கிறாராம், சொற்பொழிவுகளைக் கேட்கிறாராம்.

புத்த மதத்தில் சேர்ந்துள்ளதால் மனதில் சாந்தம் குடியேறியுள்ளதாம். எதையுமேநிதானத்துடனும், அமைதியுடனும் பார்க்க முடிகிறது என்கிறார் கீர்த்தி.

புத்த மதத்தில் சேர்ந்து விட்டாலும் கூட, படங்களில் கிளாமராக நடிக்க அடம்பிடிப்பதில்லையாம் கீர்த்தி. சினிமா வேறு, பக்தி வேறு என்கிறாராம் கேட்டால்.

அம்மணிக்கு பக்தி இன்னும் முற்றிப் போய்விடவில்லை. எனவே ரசிகர்கள் பயப்படத்தேவையில்லை!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil