»   »  பிஸி பிஸி கீர்த்தி!

பிஸி பிஸி கீர்த்தி!

Subscribe to Oneindia Tamil
கீர்த்தி சாவ்லாவின் மார்க்கெட் படு வேகம் பிடித்துள்ளது.

இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் அதிக படங்களை வைத்திருப்பவர் கீர்த்திசாவ்லாதான். திரிஷாக்கள், அசின்கள், நயனதாராக்கள் எல்லாம் செலக்ட்டிவாக நடித்துவருகின்றனர்.

ஆனால் அம்மணியோ கிடைத்த எல்லா வாய்ப்புக்களையும் அப்படியே லவட்டிப்போட்டுக் கொண்டு, என்ன வேடம் கொடுத்தாலும் நடிக்க ரெடியாக இருக்கிறார்.

உயிரெழுத்து, 1999, காதலர் கதை, பிறகு, செம்புலி, வேட்டை என ஆத்தா நடிக்கும்வெரைட்டியான படங்களின் எண்ணிக்கை அனுமார் வால் போல நீண்டுகொண்டேஇருக்கிறது.

அடி ஆத்தாடீ என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு கீர்த்தியின் மார்க்கெட் படு சூடாகஇருக்கிறது. இத்தனைக்கும் இவருக்கு நடிப்பும் அவ்வளவாக வராது, இவர் நடித்து எந்தப் படமும் பெரியஅளவில் ஓடவில்லை.

ஆனால், வாய்ப்பு பிடிப்பதில் படு கெட்டிக்காரராக இருப்பதால் தொடர்ந்து தமிழ்ப்படங்கள் வர ஆரம்பித்துள்ளன.

இதனால் சென்னையிலேயே முகாமிட்டுள்ளார் கீர்த்தி. நல்ல ஒத்துழைப்பு தந்து நடந்துகொள்வதால் தினசரி புதுப்புது இயக்குனர்கள் அவரது ஹோட்டல் சந்தித்து கதைகதையாக சொல்லி வாய்ப்பு கொடுத்து வருகிறார்களாம்.

யார் வந்தாலும் கதை கேட்டு சாதகமான பதிலை சொல்லி அனுப்புகிறாராம். இதனால்கீர்த்தியின் அறைக்கு முன் கோலிவுட் ஆட்கள் கூட்டம் அலைமோதுகிறது.

தமிழில் நிறையப் படங்கள் வருவதால் இப்போதைக்கு வேறு மொழிப் படங்களில்நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளாராம் கீர்த்தி. தனக்கு வாழ்வு தந்ததெலுங்கையும் கூட கொஞ்ச காலம் கண்டு கொள்ளப் போவதில்லாையம்.

தமிழ் ரசிகர்கள் நல்ல ரசனையாளர்கள். தங்களுக்குப் பிடித்து விட்டால் அவர்கள்யாராக இருந்தாலும் அவர்களுக்குப் பேராதரவு கொடுப்பார்கள் என்று உச்சி குளிர்ந்துஉள்ளம் நிறைய புகழாரம் சூட்டுகிறார் கீர்த்தி.

பிடிச்சா கோவில் கட்டுவாங்க, பிடிக்காட்டி..

கற்பு, கொம்பு நடிகைகள் கதி தான்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil