»   »  கீர்த்தி சுரேஷுக்கு செம ஜுரம்... லீவில் போன "ரஜினி முருகன்"..பாம்புச் சட்டைக்கும் "ரெஸ்ட்"!!

கீர்த்தி சுரேஷுக்கு செம ஜுரம்... லீவில் போன "ரஜினி முருகன்"..பாம்புச் சட்டைக்கும் "ரெஸ்ட்"!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கீர்த்தி சுரேஷுக்கு செம ஜுரம்... லீவில் போன "ரஜினி முருகன்"..பாம்புச் சட்டைக்கும் "ரெஸ்ட்"!!

காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை கீர்த்தி சுரேஷ், கேரளாவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் ரஜினி முருகன் படப்பிடிப்பிற்கு தற்காலிக விடுமுறை விடப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த 'காக்கி சட்டை' திரைப்படம் சமீபத்தில் ரிலீஸாகி நல்ல வசூலை தந்து கொண்டிருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படமான 'ரஜினி முருகன்' படப்பிடிப்பு காரைக்குடியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

மதுரையில் கிளைமேக்ஸ்

மதுரையில் கிளைமேக்ஸ்

ரஜினிமுருகன் படத்தின் 75 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும், சமீபத்தில் இந்த படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் மிகவும் பிரமாண்டமாக மதுரையில் படமாக்கப்பட்டதாகவும், கூறப்படுகிறது.

படப்பிடிப்பு நிறுத்தம்ல்

படப்பிடிப்பு நிறுத்தம்ல்

இந்நிலையில் தற்போது அந்த படத்தின் படப்பிடிப்பு திடீரென சில நாட்களுக்கு நிறுத்தப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

ரஜினிமுருகன்' படத்தின் கதாநாயகி கீர்த்தி சுரேஷ், படப்பிடிப்பின்போது உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் சொந்த ஊரான கேரளாவிற்கு சென்றுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதி

கீர்த்தி சுரேஷ் கேரள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாலும், மருத்துவர் அவருக்கு சில நாட்கள் பூரண ஓய்வு தேவை என்று அறிவுறுத்தியதாலும், படப்பிடிப்பு சில நாட்கள் ஒத்தி வைக்கப்பட்டதாகவும், அவர் குணமடைந்து திரும்பி வந்ததும், படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

விக்ரம் பிரபுவுடன்

விக்ரம் பிரபுவுடன்

மேலும் கீர்த்தி சுரேஷ், விக்ரம் பிரபுவுடன் நடித்த 'இது என்ன மாயம்' படம் மிக விரைவில் வெளியாகவுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார்.

பாபிசிம்ஹா படத்தில்

பாபிசிம்ஹா படத்தில்

கீர்த்தி சுரேஷ் உடல்நலம் சரியில்லாத ரஜினி முருகன் படம் மட்டுமின்றி அவர் பாபி சிம்ஹா உடன் நடித்து வரும் பாம்புச்சட்டை படமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

English summary
Lots of promising and positive buzzes are spreading about Sivakarthikeyan’s upcoming film ‘Rajini Murugan’, directed by Ponram of Varuthapadatha Valibar Sangam. The film has done a remarkable business across the world with Thirrupathi Brothers and Eros International releasing it together. Cinemalead wishes ‘Get well soon’ Keerthi Suresh that she may recover soon from health issues and join the team.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil