»   »  விஜய்க்கு ஜோடி... ஆவலை அடக்க முடியவில்லையாம் கீர்த்திக்கு!

விஜய்க்கு ஜோடி... ஆவலை அடக்க முடியவில்லையாம் கீர்த்திக்கு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் அறிமுகமான இரண்டே படங்களில் முதல் நிலை நாயகியானவர்கள் இரண்டு நாயகிகள்தான். ஒருவர் நயன்தாரா. இன்னொருவர் இன்றைய இளைஞர்களின் சென்செஷன் கீர்த்தி சுரேஷ்.

'இது என்ன மாயம்' படம் கவிழ்த்தாலும் ரஜினிமுருகன் அம்மணியை தமிழ் சினிமாவின் முக்கிய நாயகியாக்கிவிட்டது.

Keerthi is happy over pairing with Vijay

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் ரெமோவிலும் கீர்த்திதான் அவரது ஜோடி. தனுஷ், பாபி சிம்ஹா படங்களில் நடித்துக் கொண்டிருந்த கீர்த்தி, அடுத்ததாக விஜய்யின் புதிய படத்தில் நாயகியானதில், கோடம்பாக்க நாயகிகளின் தாய்க்குலங்களின் பொறாமைப் பார்வையில் வெந்துகொண்டிருக்கிறார் கீர்த்தி.

விஜய்யுடன் ஜோடி சேர்வதால் அவருக்கு, ரசிகர்களும் திரை உலகினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதில் கீர்த்திக்கும் ஏக மகிழ்ச்சி.

இதுகுறித்து அவர் கூறுகையில், "விஜய்சாருடன் இணைத்து நடிக்கப்போவதை நினைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருடன் நடிக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். படம் தொடங்கும் நாளுக்காக கார்த்திருக்கிறேன். ஆவலை அடக்க முடியவில்லை. ஆதரவாளித்த அனைவருக்கும் நன்றி," என்றார்.

English summary
Keerthi Suresh, the new sensation of Kollywood has expressed her immense happiness for pairing with Vijay.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil