வேட்டையன் ஃபீவர் ஸ்டார்ட்.. மனசிலாயோ பாடலுக்கு ஆட்டம் போட்ட கீர்த்தி பாண்டியன் - அசோக் செல்வன்
சென்னை: நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து தமிழ் சினிமாவிலிருந்து நடித்துவரும் அவர் கடைசியாக கண்ணகி மற்றும் ப்ளூ ஸ்டார் படங்களில் நடித்திருந்தார். கடந்த வருடம் நடிகர் அசோக் செல்வனை திருமணம் செய்துகொண்டார். ப்ளூ ஸ்டார் படத்தில் இணைந்து நடித்தபோது இரண்டு பேருக்குமிடையே ஏற்பட்ட பழக்கம் திருமணத்தில் முடிந்தது. இந்தச் சூழலில் கீர்த்தி பாண்டியன் - அசோக் செல்வன் தொடர்பான வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பெயர் எடுத்த நடிகராக திகழ்ந்தவர் அருண் பாண்டியன். ஆக்ஷன் ஹீரோவாக அறியப்பட்ட அவருக்கு கீர்த்தி பாண்டியன் என்ற மகள் இருக்கிறார். தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்த கீர்த்தி பாண்டியன் தும்பா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்தப் படமானது கடந்த 2019ஆம் ஆண்டு வெளியானது. படத்துக்கு போதிய வரவேற்பு கிடைக்காவிட்டாலும் கீர்த்தி பாண்டியனுக்கு ஓரளவு நல்ல பெயரே கிடைத்தது.

அடுத்தடுத்த படங்கள்: தும்பா படத்துக்கு பிறகு அன்பிற்கினியாள் படத்தில் நடித்தார். அதில் அருண் பாண்டியனும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கீர்த்தி பாண்டியன் நடிப்பில் வெளியான கண்ணகி படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸையே ரசிகர்கள் கொடுத்தனர்.குறிப்பாக கீர்த்தி பாண்டியனின் நடிப்புக்கும் ரசிகர்கள் தங்களது பாராட்டை தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ப்ளூ ஸ்டார் டூ திருமணம்: அடுத்ததாக அவரது நடிப்பில் ப்ளூ ஸ்டார் திரைப்படம் வெளியானது. பா.இரஞ்சித் தயாரிப்பில் அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படத்துக்கு சூப்பர் வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் நடித்தபோதுதான் அசோக் செல்வனுக்கும், கீர்த்தி பாண்டியனுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரின் காதலுக்கும் வீட்டாரின் சம்மதம் கிடைக்க கடந்த வருடம் திருமணம் நடந்தது. அந்தத் திருமணத்திலிருந்து கீர்த்தி மேற்கொண்டு அடையாளப்பட்டார்.
உருவ கேலி: முக்கியமாக கீர்த்தி பாண்டியன் அசோக் செல்வனை திருமணம் செய்துகொண்டதால் அவரது உருவத்தை வைத்து கேலி செய்தனர். ஆனால் அப்படி செய்தவர்களுக்கு அசோக் தரமான பதிலடியை கொடுத்தார். அதுமட்டுமின்றி எல்லோரையும் வம்பிழுக்கும் பயில்வான் ரங்கநாதனை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் எங்கள் வீட்டில் சண்டை என்று நீங்கள் வந்து பார்த்தீர்களா என கேள்வி கேட்டு சம்பவம் செய்தார் கீர்த்தி.
ட்ரெண்டாகும் வீடியோ: இப்போது இருவரும் தங்களது வேலைகளில் பிஸியாக இருக்கின்றனர். இந்நிலையில் அவர்கள் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது நாளை ரஜினிகாந்த் நடித்திருக்கும் வேட்டையன் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இதனால் படத்தை பார்ப்பதற்கும், ரஜினியை ரசிப்பதற்கும் ரசிகர்கள் தயாராகியிருக்கின்றனர். ப்ரீ புக்கிங்கிலும் பட்டையை கிளப்புகிறது படம். சூழல் இப்படி இருக்க வேட்டையன் படத்தில் இடம்பெற்றிருக்கும் மனசிலாயோ பாடலுக்கு அசோக் செல்வனும், கீர்த்தி பாண்டியனும் இணைந்து நடனமாடி வீடியோ வெளியிட்டிருக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











