ஒரே ரொமான்ஸ் மூட்.. இணையத்தை அலறவிட்ட அசோக் செல்வன்-கீர்த்தி பாண்டியன் போட்டோஸ்!
சென்னை: நடிகர் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியனின் ஓவர் ரொமான்ஸ் புகைப்படம் இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
தும்பா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான நடிகை கீர்த்தி பாண்டியன். அப்பா அருண்குமாருடன் இணைந்து அன்பிற்கினியாள் படத்தில் நடித்திருந்தார். மலையாளத்தில் வெளியாகி ஹிட் அடித்த ஹெலன் படத்தின் ரீமேக்காக உருவான இந்த படம் தமிழில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
கடந்த வாரம் கீர்த்தி பாண்டியன், வித்யா பிரதீப், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான கண்ணகி படமும் கதை நல்லா இருக்கு ஆனால், மேக்கிங் சரியில்லை என விமர்சிக்கப்பட்ட நிலையில், அந்த படம் வசூல் ரீதியாக வெற்றியடையவில்லை.

அசோக் செல்வனுடன் திருமணம்: படத்தை கவனமாக தேர்வு செய்து நடித்து வரும் அசோக் செல்வன் பா. ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி வரும் ப்ளூ ஸ்டார் படத்தில் கீர்த்தி பாண்டியனுடன் இணைந்து நடித்த நிலையில், இருவரும் காதல் வயப்பட்டனர். இதையடுத்து இருவரும், பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் அருண்பாண்டியனின் பண்ணை வீட்டில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது.
ஏகப்பட்ட ட்ரோல்: அருண் பாண்டியனின் சொத்துக்கு ஆசைப்பட்டு தான் அசோக் செல்வன் கருப்பாக இருக்கும் கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்துக் கொண்டார் என இணையத்தில் பலர் மோசமான கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். ஆனால், கருப்பு அழகு இல்லையா? என்றும் என் மனைவி பேரழகி என அசோக் செல்வன் நெட்டிசன்களுக்கு சரியான பதிலடி கொடுத்து இருந்தார்.
நான் அவங்க ஓனர் இல்லை: கீர்த்தி பாண்டியன் நடித்த கண்ணகி படம் வெளியான நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த கீர்த்தி பாண்டியனிடம் திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நடிப்பீர்களா? என்று செய்தியாளர் கேள்வி கேட்க கடுப்பான கீர்த்தி பாண்டியன் இதே கேள்வியை என் கணவர் அசோக் செல்வனை பார்த்து கேட்பீர்களா என பதில் கேள்வி கேட்டு செய்தியாளரை திணறடித்தார். அதை தொடர்ந்து, அசோக் செல்வனிடம் சிலர் இதுபற்றி கேள்வி கேட்க,நான் அவங்க ஓனர் இல்லை. பார்ட்னர் தான், என்னை திடீர்னு நடிக்கக் கூடாதுனு சொன்னா எனக்கு எப்படி வலிக்குமோ, அதே போலத்தான் அவங்களுக்கும் வலிக்கும் என்று நச்சுனு பதில் கொடுத்து மனைவியை பெருமைப்படுத்தினார்.
ரொமான்ஸ் மூட்: may for each other couple ஆக வலம் வந்து கொண்டு இருக்கும் இந்த ஜோடி கிறிஸ்துமசுக்கு தனது ரசிகர்களுக்கு வாழ்த்து சொல்லி உள்ளனர். அந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள் ஒரே ரொமான்ஸ் மூட் தானா என்றும், கண்ணுப்பட போகுதுப்பா சுத்திப்போடுங்க என்றும் கருத்துக்களை பகிர்ந்து கமெண்ட் பாக்ஸ் நிரப்பி வருகின்றனர். இணையத்தில் இவர்களின் க்யூட் போட்டோ காட்டுத் தீபோல பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











