பொண்ணுங்கனா அவ்ளோ இளக்காரமா?.. என் கணவரை பார்த்து இப்படி கேட்பீங்களா?.. கீர்த்தி பாண்டியன் காட்டம்!

சென்னை: நடிகர் அசோக் செல்வனை திருமணம் செய்துக் கொண்ட அருண்பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியன் சமீபத்தில் யூடியூப் தொகுப்பாளரிடம் எழுப்பிய கேள்வி தீயாக பரவி வருகிறது.

அப்பாவுடன் இணைந்து அன்பிற்கினியாள் படத்தின் மூலம் அறிமுகமானார் கீர்த்தி பாண்டியன். மலையாளத்தில் வெளியாகி ஹிட் அடித்த ஹெலன் படத்தின் ரீமேக்காக உருவான அந்த படம் தமிழில் சிறப்பாக போகவில்லை.

Keerthi Pandian befitting reply to anchor who asks do you continue acting after marriage?

கடந்த வாரம் கீர்த்தி பாண்டியன், வித்யா பிரதீப், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான கண்ணகி படமும் கதை நல்லா இருக்கு ஆனால், மேக்கிங் சரியில்லை என விமர்சிக்கப்பட்ட நிலையில், அந்த படம் வசூல் ரீதியாக வெற்றியடையவில்லை.

அசோக் செல்வனுடன் திருமணம்: பா. ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி வரும் ப்ளூ ஸ்டார் படத்தில் அசோக் செல்வனும் கீர்த்தி பாண்டியனும் இணைந்து நடித்த நிலையில், இருவருக்கும் ஏற்பட்ட காதல் காரணமாக அந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே சமீபத்தில் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர்.

ஏகப்பட்ட ட்ரோல்: அருண் பாண்டியனின் சொத்துக்கு ஆசைப்பட்டு தான் அசோக் செல்வன் கருப்பாக இருக்கும் கீர்த்தி பாண்டியனை கல்யாணம் செய்துக் கொண்டார் என பலர் கிண்டல் செய்தனர். ஆனால், கருப்பு அழகு இல்லையா? என்றும் என் மனைவி அழகி தான் என அசோக் செல்வனும் என் மருமகள் சிறந்த அழகி என அசோக் செல்வனின் அம்மாவும் மாறி மாறி பேட்டியளித்து ஹேட்டர்களுக்கு பதிலடி கொடுத்தனர்.

தொடர்ந்து நடிப்பீர்களா?: இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த கீர்த்தி பாண்டியனிடம் திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நடிப்பீர்களா? என்கிற கேள்வியை முன் வைத்திருந்தார். உடனே கடுப்பான கீர்த்தி பாண்டியன் இதே கேள்வியை என் கணவர் அசோக் செல்வனை பார்த்து கேட்பீர்களா என பதில் கேள்வி கேட்டு அவரை லாக் செய்து விட்டார்.

பெண்கள் என்றால் இளக்காரமா: காலம் காலமாக ஹீரோயின்களை பார்த்து தான் இந்த கேள்வி முன் வைக்கப்படுகிறது. மேலும், நடிகைகள் திருமணத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி வருவதை பார்த்து வருகிறோமே என அந்த தொகுப்பாளர் தொடர, ஆம் அதைத்தான் மாற்ற வேண்டும். 2023லும் அதே நிலைமை ஏன் இருக்க வேண்டும். எனக்கு புடிச்சதை நான் செய்றேன். அதில், என்ன தப்பு இருக்கு.. திருமணத்திற்கு பிறகு எந்த நடிகரிடமாவது நீங்க சினிமாவில் இருந்து விலகப் போறீங்களான்னு யாராவது கேட்டு இருக்கீங்களா, நடிகைகள் என்றால் மட்டும் ஏன் இந்த கேள்வி வருகிறது என்றே புரியவில்லை என்றார்.

அசோக் செல்வனின் தரமான பதில்: அதை தொடர்ந்து அசோக் செல்வனிடம் சிலர் இதுபற்றி சொல்ல, சரியாத்தான் சொல்லிருக்காங்க என்றும் நான் அவங்க ஓனர் இல்லை. பார்ட்னர் தான். என்னை திடீர்னு நடிக்கக் கூடாதுன்னு சொன்னா எனக்கு எப்படி வலிக்குமோ, அதே போலத்தான் இவ்ளோ நாள் நடிச்சிட்டு இருக்குறவங்களை திடீரென நடிக்கக் கூடாதுன்னு நான் எப்படி சொல்ல முடியும் பிரதர் என நச்சென பேசி தனது மனைவிக்கு மரியாதை கொடுத்து மாஸ் காட்டி உள்ளார். எல்லா கணவன்மார்களும் அசோக் செல்வன் போல இருக்க மாட்டாங்களா என ரசிகைகள் எல்லாம் ஃபீல் பண்ணி வராங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X