அஜித் போலவே கீர்த்தி பாண்டியன்.. நடிகை ஆகவில்லையென்றால் கார் ரேஸ் வீராங்கனைதான்.. செம விஷயம்

சென்னை: நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து தமிழ் சினிமாவிலிருந்து நடித்துவரும் அவர் கடைசியாக கண்ணகி மற்றும் ப்ளூ ஸ்டார் படங்களில் நடித்திருந்தார். கடந்த 2023ஆம் வருடம் நடிகர் அசோக் செல்வனை திருமணம் செய்துகொண்டார். ப்ளூ ஸ்டார் படத்தில் இணைந்து நடித்தபோது இரண்டு பேருக்குமிடையே ஏற்பட்ட பழக்கம் திருமணத்தில் முடிந்தது. திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்துவரும் கீர்த்தி பாண்டியன் இப்போது அஃகேனம் படத்தில் நடித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பெயர் எடுத்த நடிகராக திகழ்ந்தவர் அருண் பாண்டியன். ஆக்‌ஷன் ஹீரோவாக அறியப்பட்ட அவருக்கு கீர்த்தி பாண்டியன் என்ற மகள் இருக்கிறார். தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்த கீர்த்தி பாண்டியன் தும்பா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்தப் படமானது கடந்த 2019ஆம் ஆண்டு வெளியானது. படத்துக்கு போதிய வரவேற்பு கிடைக்காவிட்டாலும் கீர்த்தி பாண்டியனுக்கு ஓரளவு நல்ல பெயரே கிடைத்தது.

அடுத்தடுத்த படங்கள்: தும்பா படத்துக்கு பிறகு அன்பிற்கினியாள் படத்தில் நடித்தார். அதில் அருண் பாண்டியனும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கீர்த்தி பாண்டியன் நடிப்பில் வெளியான கண்ணகி படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸையே ரசிகர்கள் கொடுத்தனர்.குறிப்பாக கீர்த்தி பாண்டியனின் நடிப்புக்கும் ரசிகர்கள் தங்களடு பாராட்டை தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Keerthi Pandian has said that if she hadn t come to acting she would have become a car racer
Photo Credit:

ப்ளூ ஸ்டார் டூ திருமணம்: அடுத்ததாக அவரது நடிப்பில் ப்ளூ ஸ்டார் திரைப்படம் வெளியானது. பா.இரஞ்சித் தயாரிப்பில் அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படத்துக்கு சூப்பர் வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் நடித்தபோதுதான் அசோக் செல்வனுக்கும், கீர்த்தி பாண்டியனுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரின் காதலுக்கும் வீட்டாரின் சம்மதம் கிடைக்க அவர்களுக்கு திருமணமும் நடந்து முடிந்தது.

தொடர்ந்து நடிப்பு: திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்துவரும் கீர்த்தி பாண்டியன் இப்போது அஃகேனம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருடன் அருண் பாண்டியன், ரமேஷ் திலக், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. அதில் பேசிய கீர்த்தி, "இப்படத்தின் இயக்குநர் இந்தக் கதையை நான்கு வருடங்களுக்கு முன்பு என்னிடம் சொல்லியபோது அவர் இயக்கிய யாக்கை திரி என்ற குறும்படத்தை காண்பித்தார்.

தந்தை பற்றி பெருமிதம்: அதை பார்த்தவுடனேயே இப்படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டேன். எனது அப்பா ஊமை விழிகள், இணைந்த கைகள் ஆகிய படங்களில் நடித்தபோது நான் பிறக்கவில்லை. அவர் திரைப்பட கல்லூரி மாணவர்களுடன் இணைந்து எவ்வளவு ஆர்வமாக பணியாற்றியிருப்பாரோ அதே ஆர்வத்தை இந்தப் படத்தின் பணிகளிலும் காண்பித்தார். இந்தப் படத்தின் திரைக்கதை அவருடைய பெயரில்தான் இருக்கும். இதில் நடிகையாக மட்டும்தான் நான் பணியாற்றியிருக்கிறேன்.

கார் ரேஸ்தான்: இப்படத்தை பெண்களை மையப்படுத்திய படம் என்று வகைப்படுத்த வேண்டாம். படத்தில் இடம்பெற்றிருக்கும் கேரக்டர்கள் சில விஷயங்களை செய்யும். இந்தப் படத்தில் இந்திரா என்னும் கதாபாத்திரத்தில் கேப் ஓட்டுநராக நடித்திருக்கிறேன். எனக்கு ட்ரைவிங் என்றால் அவ்வளவு பிடிக்கும். நான் நடிக்க வந்திருக்காவிட்டால் கண்டிப்பாக கார் ரேஸ் வீராங்கனையாக ஆகியிருப்பேன். எனக்கு எப்போதுமே ஆதரவு கொடுத்துக்கொண்டிருக்கும் என்னுடைய தந்தைதான் எனக்கு ஹீரோ" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X