எல்லா கேரக்டர்களிலும் சிறப்பு... பிறந்தநாளில் கீர்த்தி சுரேஷிற்கு சன் பிக்சர்ஸ் பாராட்டு!
சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய மொழிப் படங்களில் தவிர்க்க முடியாதவராக மாறியுள்ளார்.
குறுகிய காலத்திலேயே தன்னுடைய நடிப்புத் திறமையால் இவர் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
இன்றைய தினம் இவர் தனது பிறந்தநாளை இவர் கொண்டாடி வருகிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மாறி மாறி நடித்து வருகிறார். இவரது நடிப்பில் தமிழ், தெலுங்கில் வெளியான மகா நடிகை படம் இவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. நடிகை சாவித்ரியின் பயோபிக்காக வெளியான இந்தப் படத்தில் அந்த கேரக்டராகவே வாழ்ந்திருந்தார் கீர்த்தி.

முன்னணி நடிகர்களுடன் ஜோடி
ரஜினியுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்த நடிகை மேனகாவின் மகளான இவர் சினிமா உலகில் எளிதாக நுழைந்தாலும் தனது நடிப்புத் திறமையால் மட்டுமே தொடர்ந்து சிறப்பாக நீடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாகவும் பல படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழில் விஜய், சூர்யா, விஷால் என முன்னணி நடிகர்களுடன் இவர் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

சிறப்பான ரஜினி முருகன்
தமிழில் இது என்ன மாயம் படத்தில் அறிமுகமானாலும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த ரஜினி முருகன் படமே இவருக்கு சிறப்பாக அமைந்தது. தொடர்ந்து இவருக்கு கோலிவுட்டில் ஏறுமுகம்தான். விஜய்யுடன் இரண்டு படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து தற்போது சூப்பர்ஸ்டாருடன் அண்ணாத்த படத்திலும் நடித்துள்ளார்.
Recommended Video

கீதாஞ்சலி படத்தில் அறிமுகம்
மலையாளத்தில் கீதாஞ்சலி என்ற படத்தில் இவர் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்திற்காக பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் இவர் ஜோடியாக நடித்து வருகிறார். சமீபத்தில் நானியுடன் இவர் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளார்.

தெலுங்கில் பிசி
மகேஷ்பாபுவுடன் சர்க்காரு வாரி பாட்டா, சிரஞ்சீவியுடன் போலோ சங்கர், மற்றும் நானியுடன் தசரா படங்களிலும் இவர் தற்போது நடித்து வருகிறார். மலையாளத்திலும் தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இன்றைய தினம் தன்னுடைய 28வது பிறந்தநாளை இவர் கொண்டாடி வருகிறார்.

பிறந்தநாள் கொண்டாட்டம்
இதையொட்டி அவருக்கு சமூகவலைதளங்களில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. சன் டிவி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஓ மை காட் பொண்ணு என்று பாராட்டியுள்ளது. இதேபோல சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தனியாக வீடியோவை பகிர்ந்துள்ளது. மேலும் எந்த கேரக்டரிலும் பொருந்துபவர் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











