ஸ்பெயினில் விடுமுறை கொண்டாட்டம்... புகைப்படம் வெளியிட்டு கீர்த்தி சுரேஷ் ஜிலீர்!
சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் பரபரப்பாக நடித்து வருகிறார்.
தமிழில் அண்ணாத்த மற்றும் சாணி காயிதம் படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது தெலுங்கில் சர்க்காரு வாரி பட்டா படத்தில் நடித்து வருகிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் இவர் நடிப்பில் உருவான மகாநடிகை சிறப்பான வசூலையும் நல்ல பெயரையும் கீர்த்திக்கு பெற்றுத் தந்தது. தற்போது இந்தப் படம் பாலிவுட்டில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இதன் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழில் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார் கீர்த்தி. இந்தப்படம் தீபாவளிக்கு ரிலீசாகும். குஷ்பூ, நயன்தாரா மற்றும் மீனாவுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் இந்தப்படத்தில் நடித்துள்ளார். படத்தில் ரஜினிக்கு மகளாக இவர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இயக்குநர் செல்வராகவனுடன் இணைந்து சாணிக் காயிதம் படத்திலும் கீர்த்தி நடித்து முடித்துள்ளார். இதில் வழிப்பறி கொள்ளைக்காரியாக கீர்த்தி நடித்துள்ளார்.
தெலுங்கில் தற்போது மகேஷ் பாபு ஜோடியாக சர்க்காரு வாரி பட்டா படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புக்காக தற்போது ஸ்பெயின் சென்றுள்ளார்.
இதனிடையே தான் தன்னுடைய வேலையை மிகவும் நேசிப்பதாகவும் அதனால் ஒவ்வொரு நாளும் தனக்கு ஹாலிடே தான் என்றும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக சினிமா பிரபலங்கள் யாரும் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத சூழல் இருந்த நிலையில் தற்போது நிலைமை மாறியுள்ளது. அனைவரும் தற்போது தங்களது விடுமுறை கொண்டாட்டங்களை துவங்கியுள்ளனர். இதுபோன்றே கீர்த்தியும் படப்பிடிப்புக்கிடையே தன்னுடைய விடுமுறையை கொண்டாடி வருகிறார்.
தொடர்ந்து தமிழில் விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் கதைகளை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். யோகா உள்ளிட்டவற்றை முறையாக செய்து வருகிறார். இதன் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். மேலும் சமீபத்தில் உடல் எடையை குறைத்து சிக்கென மாறியுள்ளார் கீர்த்தி.


Click it and Unblock the Notifications