For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மலையாள தேசத்திற்கு திரும்பிய கீர்த்தி சுரேஷ்... இணையும் வாரிசுகள்

By R VINOTH
|

சென்னை: தமிழ் படங்களில் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு இல்லாததால, கீர்த்தி சுரேஷ் திரும்பவும் தன்னோட தாய் மொழியான மலையாளப் படத்துல நடிக்கிறதுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க. மலையாள நடிகர் மோகன்லால் பையன் பிரணவ் நடிக்கிற படத்துல ஹீரோயினா கமிட் ஆகியிருக்காங்களாம்.

கோலிவுட், டோலிவுட், மல்லுவுட் படவுலகத்துல முன்னணி நடிகையா இருந்துட்டு வருபவர் கீர்த்தி சுரேஷ். இவங்களோட அம்மா மேனகாவும் முன்னாள் நடிகைதான். தமிழ்ல இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியோட நெற்றிக்கண் படத்துல ஹீரோயினா நடிச்சிருக்காங்க. கீர்த்தி சுரேஷ் முதல் முதலா குழந்தை நட்சத்திரமா பைலட்ஸ் ங்குற மலையாளப் படத்துல நடிச்சாங்க. சில வருஷத்துக்கு முன்னாடி 'இது என்ன மாயம்' தமிழ் படத்துலதான் ஹீரோயினா நடிச்சாங்க. 2016ஆவது வருஷத்துல நடிச்ச ரஜினி முருகன் படமும், ரெமோ படமும் தான் ஓரளவுக்கு வெற்றியடைஞ்சது. சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்தில நடிச்ச கீர்த்திக்கு நல்ல பெயர் பெற்றுத்தந்த படம்.

 Keerthi Suresh Committed in Malluwood film

ஆஹா ஓஹோ அழகு ஹீரோயின் என்று பேசப்பட்ட கீர்த்தி சுரேஷ்க்கு 2017 , 2018 வருஷத்தில எந்த படமும் பயங்கர வசூலை தரலை. தமிழ்ல விஜய் கூட நடிச்ச பைரவா, சர்க்கார் படங்களும், சூர்யா கூட நடிச்ச தானா சேர்ந்த கூட்டம் படமும் எதிர்பார்த்த வெற்றிய தரலை. அதுக்கு அப்புறம் பெருசா கமிட் ஆசலை. இதனால தமிழ் படத்துக்கு கொஞ்சம் கேப் விட்டுட்டு தன்னோட தாய் மொழியான மலையாள படத்துக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறதா தெரியுது.

நடிகை தீபிகா ஹோட்டல்களில் தங்கினால் 'எதை திருடுவார்' என்று தெரியுமா?

தான் நெனச்ச மாதிரி தமிழ் படங்கள் கை கொடுக்காததுனால, தமிழ் படங்களுக்கு கொஞ்சம் கேப் விட்டுட்டு சொந்த ஊரான மலையாள தேசத்து பக்கம் கவனத்தை திருப்பியிருக்காங்க. ஐந்து வருஷத்துக்கு அப்புறமா ஒரு மலையாள படத்துல நடிக்கிறதுக்கு கமிட் ஆகியிருக்காங்க. இந்தப் படத்துல ஹீரோவா நடிகர் மோகன்லாலோட மகன் பிரணவ் நடிக்கிறார். இந்தப் படத்த டைரக்ட் பண்ணப் போறது பிரபல மலையாள பட நடிகர் கம் டைரக்ட்ரான சீனிவாசனோட வாரிசான வினீத் ஸ்ரீனிவாசன்.

இந்தப் படத்துல இருக்குற இன்னொரு விஷேசம் என்னன்னா, ஹீரோவா நடிக்கிற பிரணவ், டைரக்டர் வினீத் ஸ்ரீனிவாசன் கீர்த்தி சுரேஷ் மூணு பேருமே சின்ன வயசுல இருந்து டீப் ஃபிரண்ட்ஸ்.

 Keerthi Suresh Committed in Malluwood film

இந்தப் படத்துல நடிகர் மோகன்லால் கெஸ்ட் ரோல் பண்ணுவார்னு எல்லோரும் எதிர்பாக்குறாங்க. அதனால் இந்தப் படம் ரெடியாகுறத மோகன்லாலும் ரொம்ப ஆவலோட பாத்துக்கிட்டு இருக்காரு. கீர்த்தி சுரேஷ் 5 வருஷத்துக்கு முன்னால பிரியதர்சன் இயக்கத்துல மோகன்லால் ஜோடியாக நடிச்சாங்க. மரைக்கார் வரலாற்று படத்திலும் மோகன்லால் கூட கீர்த்தி சுரேஷ் நடிக்கிறாங்க. இப்போ அவரோட மகனுக்கு ஜோடியாக நடிக்கப்போறங்க.

இந்தப் படத்தை பல வித்தியாசமான லொக்கேஷனுக்கு போய் ஷூட் பண்ண படக்குழுவினர் முடிவு பண்ணியிருக்காங்க. சினிமா உலகத்துல வாரிசுள் ஒண்ணு சேர்ந்து பல வெற்றிப் படங்கள கொடுத்திருக்கிறத நாம ஏற்கனவே பாத்திருக்கோம். அதே மாதிரி, மல்லுவுட் படவலகத்துல இருக்குற மூணு பேரோட வாரிசுகள் சேர்ந்து எடுக்குற படம்கிறதால மக்கள் எல்லோருமே ரொம்ப ஆவலோட எதிர்பாத்து காத்திருக்காங்க.

English summary
Keerthi Suresh is once again making an appearance in his mother tongue, Malayalam, due to his lack of recognition in the Tamil film world. Malayalam actor Mohanlal's son Pranav plays the heroine in the movie.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more