சமந்தாவை தொடர்ந்த கீர்த்தி சுரேஷ்... என்னா குத்து குத்தறாங்க!

சென்னை : நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து பாடல் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்தப் பாடல் தற்போது இரண்டு வாரங்களில் 140 மில்லியன் வியூஸ்களை தாண்டி சென்றுள்ளது.

சமந்தா உள்ளிட்ட பிரபலங்கள் பலர் இந்தப் பாடலுக்கு ஆடியுள்ள நிலையில், தற்போது அந்த வரிசையில் இணைந்துள்ளார் கீர்த்தி.

பீஸ்ட் படம்

பீஸ்ட் படம்

நடிகர் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வரும் ஏப்ரலில் கோடைக் கொண்டாட்டமாக இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

 பிரபலங்கள் ஆட்டம்

பிரபலங்கள் ஆட்டம்

படத்தின் சூட்டிங் மற்றும் டப்பிங் பணிகள் நிறைவடைந்த நிலையில் கடந்த 14ம் தேதி காதலர் தின ஸ்பெஷலாக படத்தின் முதல் பாடல் வெளியானது. அனிருத் இசையில் இந்தப் பாடல் அனைவரையும் கவர்ந்துள்ளது. இதுமட்டுமில்லாமல் முன்னதாக பாடலுக்கான ப்ரோமோவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

கீர்த்தி சுரேஷ் ஆட்டம்

இந்நிலையில் இந்த வரிசையில் இணைந்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். மஞ்சள் நிற வெல்வெட் சுடிதாரில் வித்தியாசமான ஹேர்ஸ்டைலுடன் மற்றொரு பெண்ணுடன் இணைந்து இந்த ஆட்டத்தை போட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது அவரது நடனம். டான்ஸ் என்றாலே கீர்த்திக்கு அல்வா சாப்பிடுவது போல. அதிலும் சிறப்பான இசையுடன் அமைந்துள்ள இந்த பாடலுக்கு அவரது நடனமும் சிறப்பு சேர்த்துள்ளது.

அடுத்தடுத்த படங்களில் பிசி

அடுத்தடுத்த படங்களில் பிசி

தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். மகேஷ் பாபுவுடன் இணைந்து இவர் நடித்துள்ள சர்க்காரு வரும் மே மாதம் 12ம் தேதி வெளியாக உள்ளது. இதையடுத்து தமிழில் சாணிக் காயிதம் படத்தில் இவர் நடித்து முடித்துள்ளார். மேலும் உதயநிதியுடன் இணைந்து மாமன்னன் படத்திலும் நடித்து வருகிறார் கீர்த்தி

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X