கடைசியா Nemoவை கண்டு பிடித்துவிட்டேன்.. ஆழ்கடலில் கீர்த்தி சுரேஷின் அட்டகாச சாகசம்!

சென்னை: திருமணத்துக்குப் பிறகு மீண்டும் பிசியாக மிஷ்கின் உடன் இணைந்து சத்தியவான் சாவித்ரி படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் உலக கடல் தினத்தை முன்னிட்டு ஆழ்கடலுக்குள் சென்று ஸ்கூபா டைவிங் செய்த வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

"உன் மேல ஒரு கண்ணு.. நான் தான் உன் முறை பண்ணு" என சிவகார்த்திகேயன் உடன் ரஜினி முருகன் படத்தில் பாடி ஆடி நடித்து ஏகப்பட்ட கோலிவுட் ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரியாகவே வாழ்ந்துக் காட்டி தேசிய விருதையும் தட்டித் தூக்கினார்.

Keerthi Suresh finally Finding Nemo at deep ocean Scuba Diving
Photo Credit:

சமீப காலமாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படங்கள் சரியாக போகாத நிலையில், திடீரென தனது காதலரை அறிமுகம் செய்து திருமண வாழ்க்கையிலும் இணைந்து விட்டார். இதற்கு மேல் நடிக்க மாட்டாரா என்கிற பேச்சுக்கள் எழுவதற்கு முன்பே அக்கா வெப்சீரிஸ், சத்யவான் சாவித்ரி என அடுத்தடுத்து பிசியாக உள்ள கீர்த்தி சுரேஷின் ஸ்கூபா டைவிங்கும் அதற்கு அவர் கொடுத்த Nemo கேப்ஷனும் ரசிகர்களை கவர்ந்துள்ளன.

Nemoவை கண்டு பிடிச்சிட்டேன்: பிரபல ஹாலிவுட் அனிமேஷன் படமான Finding Nemo படத்தை பலரும் பார்த்திருப்போம். ஆழ்கடலில் ஸ்கூபா டைவிங் செய்து ஏகப்பட்ட வெரைட்டியான மீன்களை பார்த்த நடிகை கீர்த்தி சுரேஷ் நீமோ போன்ற மீனையும் பார்த்து ரசித்த நிலையில், தனது வீடியோவை ஷேர் செய்து, ஒரு வழியாக நீமோவை கண்டு பிடித்துவிட்டேன் என வழக்கம் போல தனது பாணியில் குறும்புத்தனமாக கேப்ஷன் போட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

கோர்ட் ரூம் டிராமா: பிரவீன் விஜய் இயக்கத்தில் சாம் சி.எஸ். இசையில் மிஷ்கின் உடன் இணைந்து சத்தியவான் சாவித்ரி படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். கோர்ட் ரூம் டிராமாவாக உருவாகி வரும் இந்த படத்தில் தனது கணவனை குற்றவாளி கூண்டில் இருந்து காப்பாற்ற போராடும் வழக்கறிஞர் பெண்ணாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், நெட்பிளிக்ஸின் அக்கா வெப்சீரிஸ் எப்போது வரும் என கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் ரொம்பவே ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். கடைசியாக வெளியான ரிவால்வர் ரீட்டா திரைப்படம் கீர்த்தி சுரேஷுக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X