சிலுக்கு ரேஞ்சுக்கு கவர்ச்சியில் இறங்கிய கீர்த்தி சுரேஷ்.. அடேங்கப்பா என்ன ஒரு பளபளப்பு!
சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷ் இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சியில் உள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தமிழில் சூப்பர் ஸ்டார் உடன் இணைந்து நடித்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்க உள்ளது.
நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை கச்சிதமாக தேர்ந்தெடுத்து வெற்றிக் கொடியை நாட்டி வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் இதுவரை குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வர இப்பொழுது சிலுக்கு ரேஞ்சுக்கு இறங்கி கவர்ச்சியில் அதகளம் செய்திருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தை மிரட்டியுள்ளது.

துபாயில் படப்பிடிப்பு
விஜய் தேவரகொண்டா,ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்திருந்த கீதாகோவிந்தம் படத்தை இயக்குனர் பரசுராம் இயக்கி இருக்க இப்பொழுது சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிக்கும் சர்க்காரு வாரி பாட்ட படத்தை இயக்கிவருகிறார் அதில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார் இதன் படப்பிடிப்பு துபாயில் நடைபெற்றுக் கொண்டுள்ளது.

முக்கிய வேடங்களில்
விஸ்வாசம் படத்திற்கு பிறகு மீண்டும் அதே சாயலில் குடும்ப திரைப்படமாக உருவாகும் அண்ணாத்த படத்தை சிறுத்தை சிவா இயக்க அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக கீர்த்தி சுரேஷ், நயன்தாரா முதல்முறையாக இணைந்து நடிக்கின்றனர் மற்றும் குஷ்பு ,மீனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் . இதன் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதத்தில் தொடங்க உள்ளது.

தந்தை சுரேஷ் குமார் தயாரிப்பில்
நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை கச்சிதமாக தேர்ந்தெடுத்து அதில் வெற்றியும் கண்டு வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் மகாநடி,பெண் குயின்,மிஸ் இந்தியா அந்த வரிசையில் முதல்முறையாக தந்தை சுரேஷ் குமார் தயாரிப்பில் வாஷி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

செம ஹாட்டாக போஸ்
இதுவரை நடித்த திரைப்படங்களில் துளிகூட கவர்ச்சி காட்டாமலேயே பெரும் ரசிகர் கூட்டத்தைக் கொண்டு முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சியிலும் இறங்கி ரசிகர்களை குளிர்வித்து வர தற்போது ஜிகு ஜிகு சேலையில் சிலுக்கு ரேஞ்சுக்கு இடை அழகு மற்றும் முன்னழகு என அனைத்தையும் காட்டிக்கொண்டு செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளத்தை மிரட்டி வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











