அடுத்து சூர்யாவுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்!
கீர்த்தி சுரேஷுக்கு சுக்கிர தசை இப்போது. ரஜினி முருகன் என்ற ஒரு படம் அவரை தமிழ் சினிமாவின் டாப் நாயகியாக்கிவிட்டது.
அடுத்து ஏக் தம்மாக விஜய்யின் ஜோடியாகிவிட்டார், அவரது 60 வது படமான பைரவா-வில்.

இப்போது கீர்த்தி சுரேஷுக்கு ஏக டிமான்ட். கொம்பன் முத்தையா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தியைத்தான் ஒப்பந்தம் செய்துள்ளார்களாம்.
தற்போது 'எஸ்-3' படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்து விக்னேஷ் சிவன் படத்திலும், தொடர்ந்து பண்ணையாரும் பத்மினியும் அருண்குமார் இயக்கும் படத்திலும் நடிக்கிறார்.
இந்த படங்களை முடித்த பிறகு கீர்த்தி சுரேஷ் - சூர்யா நடிக்கும் படம் தொடங்குகிறது. இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு நடைபெறப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











