கீர்த்தி சுரேஷ் க்யூட்டா இருக்காங்க - உள்ளம் கேட்குமே பூஜா!
சென்னை: நடிகை பூஜா முதன்முதலாக திரைப்படத்தில் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரான ஜீவா இயகத்தில் உருவான 'உள்ளம் கேட்குமே' படத்தில் தான் நடித்தார். அந்த படம் தாமதமாக ரிலீஸானதால் அதற்கு முன்பே சரண் இயக்கத்தில் வெளிவந்த 'ஜே ஜே' படத்தின் மூலம் தமிழ்சினிமாவிற்கு அறிமுகமாகிவிட்டார் .
அதற்கு பிறகு மீண்டும் சரண் இயக்கத்திலே தல 'அஜித்துடன்' நடித்திருந்தார் .அந்த படம் பெரிய வெற்றி அடைந்து பூஜாவுக்கு தமிழகத்தில் நிரந்தர இடம் பிடித்து கொடுத்தது .ஏனெனில் பூஜா இலங்கையில் பிறந்து பின் தன் அப்பாவுடன் இந்தியா வந்து படிக்கும் போது சினிமாவில் அறிமுகமானார் . அதற்கு பிறகு தயாரிப்பாளர் ஆர்.பி.சௌதரி மகனான ரமேஷ் அறிமுகமான ஜித்தன் படத்தில் நடித்து இருந்தார் .அந்த படமும் மாபெரும் வெற்றி அடைந்தது .

அதற்கு பிறகு பூஜா பட்டியல் , தம்பி, தகப்பன்சாமி ,பொறி , பந்தய கோழி, ஓரம் போ , நான் கடவுள், துரோகி, விடியும் முன் ஆகிய படங்களில் நடித்தார் .இதற்கு பிறகு தமிழில் நடிக்காத பூஜா தனது சொந்த நாடான இலங்கைக்கே திரும்பி சென்று அங்கு சிங்கள படங்களில் நடித்து வந்தார் .இரண்டு வருடங்களுக்கு முன் அவருக்கு இலங்கயை சேர்ந்த ஒரு தமிழ் தொழிலதிபருடன் திருமனம் நடைப்பெற்றது .
நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னை வந்த பூஜா ஒரு தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்தார் .அதில் பல சுவாரஸ்யமான விசயங்களை பகிர்ந்து கொண்ட 'பூஜா' ,தமிழில் தனக்கு பிடித்த நடிகர் விஜய் சேதுபதி என்றும் பிடித்த நடிகை 'கீர்த்தி சுரேஷ் ' என்றும் கூறினார் ,ஏனெனில் கீரத்தி சுரேஷ் மிகவும் அழகாக கீயூட்டாக இருப்பதாக கூறினார் .
மேலும் தான் ஆஸ்திரேலியாவில் இருந்ததால் தான் தனது நண்பரான ஆர்யா கல்யாணத்திற்கு வர முடியவில்லை என்று தெரிவித்தார். ஆர்யா மற்றும் பூஜா இணைந்து 4 படங்களில் நடித்துள்ளனர். அவை உள்ளம் கேட்குமே ,பட்டியல்,ஓரம் போ மற்றும் நான் கடவுள் ஆகும் . இதில் அனைத்து படங்களுமே மாபெரும் வெற்றி அடைந்தவை . மீண்டும் பூஜா தமிழில் நடிக்க வேண்டும் என்பது பல ரசிகர்களின் எதிர்பார்ப்பு .


Click it and Unblock the Notifications











